கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஆரி மற்றும் ஜி.வி.பிரகாஷ்!

நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூற வந்தோம் ஆனால் இங்கே இதுவரை மொத்தம் 60க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக கூறுகிறார்கள் சின்னதுறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரெம்யாஸ், ரஜுஸ்,ஜெயின், ஆண்டனி என நால்வர் உயிர் இழந்துள்ளனர் அந்த குடும்பத்தில் அனைத்து ஆண்களும் இறந்துவிட்டார்கள் அவர்களை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை என்று கூறும் போது மனது படபடக்கிறது.

மீனைத்தேடி கடல் சென்றவர்கள் பிணங்களாக வருகிறார்கள்​. இவர்களின் வாழ்வாதாரமே இந்த மீன்பிடி தொழில்தான் ஆனால் முறையான தொழில் நுட்பம் இல்லாமல் கடலில் சென்றதால் இம்மாவட்டத்தின் பாதி குடும்பத்தில் ஆண்களை இழந்து பெண்கள் விதவைகளாக வாழ்கிறார்கள்…மேலும் இரப்பர் தோட்டம், வாழை தோட்டம் போன்றவைகளோடு விவசாயமும் அழித்ததால் அவர்கள் வாழ வழியின்றி உயிர் வாழ்கிறார்கள்.

ஒரு வீட்டில் டீவி செல்போன் இருந்தால் அவர்களின் வாழ்க்கை வசதியாக இருக்கும் என்று அரசு நினைக்காமல் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் அரசு மீனவர்கள் மீன்பிடிக்க விஞ்ஞான முறையில் அவர்களுக்கான சாதனங்களை ஏற்படுத்தி தரவேண்டும்

அதேபோல் வெளிநாட்டில் உள்ளது போல் ஆளில்லா விமானம் மூலம் கடலில் மீனவ மக்களை கண்டுபிடித்தல் போன்றவற்றை அரசு உடனே செய்து உதவிட வேண்டும் என்றார்கள்​.​

மேலும் அண்டை நாடுகளில் மீனவர்களுக்கான தொழில்நுட்பத்தை அந்தந்த அரசுகள் ஏற்படுத்தி தருவதைபோல் நம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்படுத்தி நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உயிரையும் காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த இழப்பு நமக்கு உருவாக்கி உள்ளது என்றனர்.