Celebrity பேட்மிண்டன் league இரண்டாவது சீசன் வரும் பிப்ரவரி மாதம் துவங்குகிறது – ஹேமச்சந்திரன்

இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் விளையாட்டாகவும், விளையாட்டு செய்திகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் விளையாட்டாகவும் இருக்கிறது பேட்மிண்டன். இந்த விளையாட்டை விரும்பும் மக்கள் அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. திரைத்துறை பிரபலங்கள் மத்தியிலும் செலிபிரிட்டி பேட்மிண்டன் விளையாட்டு பிரபலமாகி, தற்போது அவர்களுக்காகவே பிரத்தியேகமாக celebrity பேட்மிண்டன் league உருவாகி இன்று மிகவும் பிரசித்தி பெற்று இருக்கிறது. இந்த celebrity பேட்மிண்டன் league நிறுவனர் பிராண்ட் அவதார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ஹேமச்சந்திரன்.மிகப்பெரிய அளவில் கடந்த ஆண்டு துவங்கிய இந்த பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசன் வரும் பிப்ரவரி மாதம் துவங்க இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

தென்னிந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு அணியிலும் பிராண்ட் அம்பாசடர், டீம் மோட்டிவேட்டர், அணித்தலைவர் மற்றும் அணி உறுப்பினர்கள் இடம் பெறுவர். இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் ரசிகர்கள் கவனித்து பார்க்கும் திரை நட்சத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொழுதுபோக்கு துறையில் காலடி எடுத்து வைத்து மிகவேகமாக தங்களை நிறுவி வரும் ஸ்ரீகோகுலம் நிறுவனம் தமிழ்நாடு அணியை வாங்கியிருக்கிறது.

. “இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் சிட் பண்ட்ஸ், ஹோட்டல்ஸ், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் முன்னோடியான ஸ்ரீகோபாலன் நிறுவன கூட்டமைப்பின் துணை தலைவர் பைஜூ கோபாலன் சென்னை அணியை வாங்கியிருக்கிறார். அணியின் பிராண்ட் அம்பாசடர், கேப்டன், மற்ற உறுப்பினர்கள் ஆகியோர் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்” என பெருமையாக சொல்லி முடித்தார் நிறுவனர் மற்றும் சிஇஓ ஹேமச்சந்திரன்.

Previous articleOn Body and Soul Movie Review In Tamil by Jackiesekar
Next articleContent is the king and Marketing is the queen – Vijay Antony