அன்புசெழியனுக்கு தண்டனை வழங்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த கோபி காந்தி

ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் நிறுவனர், தயாரிப்பாளர், நடிகர் கோபிகாந்தி தமிழக முதலமைச்சர்            எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.  இது குறித்து செய்தியாளர்களிடம் கோபி காந்தி கூறியதாவது.  தயாரிப்பாளர் அசோக்குமார் மரணத்துக்கு காரணமான கந்துவட்டி கும்பல் தலைவன் அன்புச்செழியனுக்கு கடுமையான தண்டனை வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் கடன் வாங்கும் அனைவரும் பணம் வைத்துக் கொண்டு  கடன் வாங்குவதில்லை.  கடன் கொடுப்பவர்கள் அனைவரிடமும் அளவுக்கு அதிகமான பணம் இருப்பதால்தான் பணத் தொழில் செய்து வருகிறார்கள்.  ஆகையால் கடன் கொடுத்துவிட்டு மனிதர்களை தகாத வார்த்தைகளாலும், உடனடியாக வழங்கியே ஆக வேண்டும் என்று துன்புறுத்துவது மிக மிக கொடிய செயலாகும்.  ஆகையால் கந்து வட்டி கும்பலோ, வங்கி வசூலோ தற்போது மிகவும் கொடூரமாக நடைபெற்று வருகிறது.    மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு பிறகும் அனைத்து தொழில் செய்பவர்களும் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.  ஆகையால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இப்பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் வகையில்  அவசர சட்டம் இயற்றி அனைத்து தரப்பு மக்களையும் காப்பாற்ற அரசாங்கம் முன் வர வேண்டும்.  இல்லாவிட்டால் அனைத்து குடும்பங்களும் தற்கொலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகும்.  இதற்கு முக்கிய காரணமாக     அரசாங்கமே விளங்கும்.  அனைத்து தரப்பு மக்களையும் காப்பாற்ற அரசு பொறுப்பில் உள்ளவர்கள்          அவசர சட்டம் இயற்ற வேண்டும்.  இல்லாவிட்டால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.  ஜல்லிகட்டு போராட்டத்தை விட மாபெரும் போராட்டம் நடைபெறும்.  ஆகையால் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக வரும் அனைத்து அரசியல்வாதிகளும், அரசுத்துறை உயர் அதிகாரிகளாக இருந்தாலும் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள்.  பணத் தொழில் செய்பவர்கள் மக்களை துன்பறுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களை தற்கொலைக்கு தூண்டினால் கடும் தண்டனை வகிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.  மக்கள் அனைவரும் துன்புறுத்துபவர்களை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்து கஷ்டத்தில் இருந்து விடுப்பட்டுக் கொள்ள வேண்டும்.  மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடாது.  இனி வரும் காலங்களில் மக்கள் யாவரும் கடன் வாங்கி எந்த ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது.  கடனில்லா வாழ்க்கை வாழ நமது வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு சர்வதேச சமூக சேவை மையத் தலைவர் ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் நிறுவனர்,  தயாரிப்பாளர், நடிகர் கோபி காந்தி தகவல் தெரிவித்துள்ளார்.