ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உதயா இளைய திலகம் பிரபு இணைந்து நடிக்கும் “உத்தரவு மகாராஜா”

இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது, “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணையும் “உத்தரவு மகாராஜா”

“உத்தரவு மகாராஜா”படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குநர் கையாண்டிருக்கிறார். மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த சைக்கோ த்ரில்லர் கதை இது. இயக்குனராக ஆஸிப் குரைஷி அறிமுகமாகிறார். இவர் தமிழ் இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

இப்படத்தில் பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நாசர், கோவைசரளா, ஸ்ரீமன், மனோபாலா, MS பாஸ்கர், சரவணன், தனஞ்செயன், தளபதி தினேஷ், சோனியா போஸ், பிரேம் மற்றும் பல நட்சத்திரங்களுடன் நீண்ட இடை வெளிக்குப் பின் குட்டிபத்மினி நடிக்க இருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் முதற்கொண்டு பெரும்பாலான முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா. இவர் தமிழில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மற்றும் பல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர்.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரன்
படத்தொகுப்பு – சத்ய நாராயணன்
நடனம் சாண்டி
மக்கள் தொடர்பு நிகில்

Previous articleActress Ramya Nambeesan on Gaali Pannura – Semma Botha Aagathey
Next articleUtharavu Maharaja Movie Stills