பிரான்சிலும் 30 தியேட்டர்களில் வெளியாகிறது “ மேல் நாட்டு மருமகன் ”

உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம்
“ மேல் நாட்டு மருமகன் “
இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் இயக்குனர் எம்.எஸ் .எஸ் கூறும் போது….
மேல் நாட்டு மருமகன் ஒரு கலாச்சாரப் பதிவு.
நம் நாட்டு கலாச்சாரத்தின் மீது ஈர்க்கபட்ட ஒரு பிரெஞ்ச் நாட்டு பெண் நம் நாட்டு இளைஞனை காதலித்து கரம் பிடிப்பதே கதை.
படத்தை வெளிதிடுவதற்கு பல முறை முயன்றோம் பல தடைகள்
சின்ன படங்களுக்கு ஏகப்பட்ட தடைகள் அந்த தடைகளைத் தாண்டி தான் வர வேண்டி இருக்கிறது. டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிட உள்ளோம்.
இங்கு மட்டுமல்ல பிரான்சிலும் 30 தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்ய உள்ளோம் என்றார் இயக்குனர்.

Previous articleஅட்டகத்தி தினேஷ் நடிக்கும் “ களவாணி மாப்பிள்ளை “ காந்தி மணிவாசகம் இயக்குகிறார்
Next articleகிளாப்போர்டு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் வி.சத்யமூர்த்தி நடிக்கும் “ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “