“நாச்சியார்” படத்திற்காக மனதை வருடும் பாடலை பாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார்

பாடகராக, இசைமைப்பாளராக, நடிகராக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ் குமார். அவரது மெய்சிலிர்க்கும் குரலில் பாடிய பல பாடல்கள் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் பாடிய “மெர்சல் அரசன்” பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அவரே மெய்சிலிர்த்துப் போன ஒரு பாடலை இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் “நாச்சியார்” படித்திற்காக பாடியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசையில் Dr.தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய வரிகளில் ” ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து” என்று தொடங்கும் பாடலைத் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்த பாடகி பிரயங்காவுடன் இணைந்து பாடியுள்ளார். மேலும் இப்பாடல் அனைவரது மனதை வருடும் என்றும், அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஜோதிகா ஜீ.வி.பிரகாஷ் குமார் இணைந்து நடிக்கும் “நாச்சியார்” படத்தை பி ஸ்டுடியோஸ், EON ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர்.

படத்திற்கு ஒளிப்பதிவு – ஈஸ்வர், படத்தொகுப்பு – சதீஷ் சூர்யா, கலை – C.S.பாலசந்தர்.

Previous articleTheeran Adhigaram Ondru Movie Review By Jackiesekar
Next articleபாடகி பிரியங்காவின் கனவை நிறைவேற்றிய இசைஞானி இளையராஜா