குழந்தைகளோடு “குழந்தைகள் தின“ விழாவை கொண்டாடிய “பிக்பாஸ்“ வையாபுரி !

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகர் வையாபுரிக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரை ரசிக்காத ஆளே இல்லை எனலாம்.

நடிகர் வையாபுரி திருவாரூரில் உள்ள “ நியூ பாரத் மேல்நிலை பள்ளி “ 25வது ஆண்டு விழா மற்றும் குழந்தைகள் தின விழா சிறப்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு குழந்தைகளோடு உரையாடினார். விழாவில் குழந்தைகள் நடிகர் வையாபுரியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி பேசும் “ காலையானால் ஈ தொல்லை , இரவு ஆனால் கொசு தொல்லை , அது எல்லாவற்றையும் விட இவங்க தொல்லை “ என்ற வசனத்தை பேச சொல்லியும் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பேசிய மற்ற விஷயங்களை பேச சொல்லியும் கோரிக்கை வைத்து. அவர் பேசியதும் அதை கேட்டு கை தட்டி ரசித்து சிரித்துள்ளனர். இதுவரை வையாபுரியிடம் ஜெமினி திரைப்படத்தில் இடம்பெற்ற “ ஏக் மார் தோ துக்கடா “ வசனத்தை பேச சொல்லி தான் அனைவரும் கேட்பார்களாம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Pre KG குழந்தைகள் முதல் பள்ளியில் உள்ள அனைவரும் பிக்பாஸில் இவர் விஷயங்களை பேச சொல்லி தான் கேட்கிறார்களாம்.

நடிகர் வையாபுரி தங்கள் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பள்ளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி , அக்குழந்தைகளை மகிழ்வித்தது நடிகர் வையாபுரிக்கு மகிழ்ச்சி.

Previous articleTheeran Adhigaaram Ondru Movie Stills
Next articleSPI Cinemas launches the first multiplex in Puducherry with “The Cinema”