உலக திரைப்படங்கள் எல்லாம் அந்த அந்த நாட்டு மனிதர்களின் பிரச்சனைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கின்றன.. ஆனால் நம்ம ஊரில் கலெக்ஷன் வரவேற்பு போன்ற விஷயங்களை காரணம் காட்டி இன்னமும் காதல் திரைப்படங்களை டஜன் கணக்கில் எடுத்துக்கொண்டு இருக்கின்றோம்..
அறம் திரைப்படத்தின் கதை என்ன..?
நயன்தாரா கலெக்டர்… அவர் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை அவருடை வேலைக்கே வேட்டு வைக்கின்றது.. அது என்ன பிரச்சனை என்பதை தியேட்டருக்கு போய் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்..
எளிய மனிதர்களின் பிரச்சனையை பேசிய வகையில் இந்த திரைப்படமும் சரி இயக்குனர் மற்றும் நயன்தாரா மனதில் நிற்கின்றார்கள்.
இந்த படத்துக்காகவே நயனை காதலிக்கலாம்.. அந்த அளவுக்கு பின்னி இருக்கின்றார்.. இந்த படத்தில் நயன் நடிக்கவில்லை என்றால் இந்த திரைப்படம் இந்த அளவுக்கு செல்ப் எடுத்து இருக்காது என்பதே உண்மை. அது மட்டுமல்ல டாக்குமென்ட்ரி முத்திரை குத்தி இருப்பார்கள்..
அதே போல காக்கா முட்டை பசங்களுக்கு அப்பா அம்மாவா நடிச்சவங்க பின்னி இருக்காங்க….
கோபிநாயினார் சிறப்பாக இயக்கி இருக்கின்றார்.
நல்ல படம் வரலை மக்களின் பிரச்சனைகளை பேசக்கூடிய படம் வரலைன்னு பேசறிங்க இல்லை .. இப்ப அறம் வந்து இருக்கு….
என்ன கிழிக்க போறிங்கன்னு பார்ப்போம்.
https://www.youtube.com/watch?v=qvCUOnLWGMM