காவியத் தலைவன் ஜில்ஜங்ஜக்ன்னு நம்பிக்கையாய் இருந்த படங்கள் எல்லாம் தோல்வியை கொடுக்க பராசக்தி கல்யாணி போல வாழ்க்கையின் ஓரத்துக்கே போய் தன்னுடைய நண்பர் மிலிந்துடன் உட்கார்ந்து ஹாரர் பக்கம் பார்வையை திருப்பி பத்தே பத்து கேரக்டர்களை வைத்துக்கொண்டு ஒரு மினிமிலிடிக் ஜானாரில் இந்த படத்தை கொடுத்து இருக்கின்றார் சித்தார்த்.
அவள் திரைப்படத்தின் கதை..
இமயமைலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு ஊரில் அறுவை சிகிச்சை நிபுனர் சித்தார்த் ஆண்ட்ரியா தம்பதிகள் வசித்து வருகின்றார்கள்… அவர்களுடைய பங்களா டைப் வீட்டுக்கு அதுல் குல்கர்னி பேமலி குடித்தனம் வருகின்றார்கள்.. அதன் பிறகு இரண்டு குடும்பத்தினர் நிம்மதியும் பறிபோகின்றது.., சோ. என்ன காரணம் வெண்திரையில் காணுங்கள்.
அடித்து துவைத்து காயப்போட்ட கதை என்றாலும் அவள் திரைப்படம் கொஞ்சம் ரசிக்க வைக்கின்றது.. காரணம் இந்த மாதிரி பேய் படங்கள் ஹாரர் திரைப்படங்களின் ஆதார சுருதியாக கதைக்கு அடுத்த படியாக அழகான பெண் கண்டிப்பாக தேவை…. இதில் ஆன்ட்ரியா அன்டு சித்தார்த் ரெண்டு பேரின் ரோமான்ஸ் மற்றும் லிப் லாக் காட்சிகள் பேய் பயமுறுத்து பய வியர்வையையும் மீறி ரிலாக்ஸ் கொடுக்கும் என்பதில் என்ற மாற்று கருத்தும் இல்லை.
நிறைய காட்சிகளில் தியேட்டர் பயப்படுகின்றது … சிரிக்கின்றது… பயத்தில் மொபைல் நோண்டுகின்றது… ஆன்ட்ரியா வரும் காட்சிகளில் புல் அட்டேன்ஷனில் திரையில் பார்வையை செலுத்துகிறது… புல் அட்டேன்ஷனில் எந்த டபுள் மீனிங்கும் இல்லை என்பதை சாமி சத்தியமாக சொல்லிக்கொள்ள விருப்புகிறேன்.
ஜெனியாக நடித்த சின்ன பெண் சான்சே இல்லை.. பின்னு இருக்கின்றார்.. சைக்கியாரிஸ்ட் டாக்டர் சுரேஷ் மற்றும் சித்தார்த் டாக்கிங்க போர்ஷன் செம மெச்சூர்ட் அன்டு இயல்பான டாக்கிங்.
படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகளை குறைத்து இருக்கின்றார்கள்.. ஆனால் செம காமெடி 80 வருஷ பேயிக்கு சாரா எங்க இருக்கான்னு கண்டு பிடிக்க முடியாம தவிப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.
இந்த மாதிரி திரைப்படங்கள் ஏகாப்ட்டது பார்த்து இருந்தாலும் இந்த படம் ஹாரார் திரைப்பட விரும்பிகளை நிச்சயம் இந்தபடம் ஏமாற்றது என்பது உண்மை.
ஜாக்கிசேகர்
https://www.youtube.com/watch?v=We6pI172Y1g