இயற்கை விவசாயம் சார்ந்த பரம்பரிய அறிவு மற்றும் இக்காலத்துக்குத் தேவையான தொழில்நுடப அறிவு, இவை இரண்டையும் ஒருங்கினைத்து விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாத்து மக்களுக்கு நல்ல உணவுக்கான உத்திரவாதத்தை தருவதை தன்னுடைய முக்கிய செயலாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் தான் இந்திரா ஆக்ரோ டெக்.
இயற்கை மீது பற்றுள்ள ஒத்த கருத்துடைய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஒருங்கினைத்து பாரம்பரிய கூட்டுறவுப்ப பண்னை முறையில் நவீன தொழில் நுடபத்தை புகுத்தி எதிர்கால சந்ததியருக்கான நலனை தன் யுக்திகளின் மூலம் இன்றே விதைக்கின்றது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்.
இன்று நம் குழந்தைகளிடம் எங்கிருந்து அரிசி வருகிறது? எங்கிருந்து பருப்பு வருகிறது? என்று கேட்டால் பெரும்பாண்மையான குழந்தைகளின் பதில் தெரியாது என்பதுதான். இயற்கையை அறிந்துகொள்ளுதல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று. அவ்வகையில் தன் திட்டத்தின் மூலம் அனைவரும் விவசாயத்தில் பங்கெடுத்துக்கொள்ள வாய்ப்பளிக்கின்றது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம். மேலும் இது முதலீடு செய்தவர்களுக்கு கைமேல் பலன்கள் பல தரும் திட்டமாகவும் அமைகின்றது.
பல விவசாயிகளோடு கைகோர்த்து தான் பராமரிக்கும் மிகப் பெரிய விவசாய பண்ணையை சிறு சிறு பகுதிகளாக விற்று அதில் அருவடை செய்யப்படும் அரிசி, பருப்பு, மற்றும் பிற தானியங்களின் ஒரு பகுதியை வருடந்தோறும் அந்த நிலத்தை வாங்கிய உரிமையாளருக்கு அளிக்கின்றனர். இதை விவசாயத்திற்கு நகர மக்கள் செய்யும் பங்களிப்பாகவும், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையளிக்கும் ஒரு திட்டமாகவும் வகுத்துள்ளது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்.
பயோ டெக்னாலஜியில் ஆய்வுகள் பல செய்துகொண்டிருக்கும் டாக்டர் M.ஆனந்த பாரதி அவர்கள் இந்திரா ஆக்ரோ டெக்கின் நிறுவனராவார், சிவில் எஞ்சினியரிங் பட்டம் பெற்று இன்று கட்டிடக்கலை துறையில் சிறந்து விளங்கும் திரு.பூபேஸ் நாகராஜ் இதன் துனை நிறுவனராவார். இருவரின் கனவே விவசாயம் விவசாயி பொதுமக்கள் ஆகிய மூன்று புள்ளிகளையும் இணைத்து இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனத்தின் மூலம் நிலையான தரமான உணவுச்சங்கிலியை அமைப்பதே ஆகும்.
பிரபல இயற்கை வேளான் வல்லுனர் பாமையன் இவர்களின் அனைத்து திட்டங்களுக்கும் பக்கபலமாக இருந்து பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும் வழக்கறிஞர் R.தமிழ்செல்வி போன்ற துறைசார்ந்த வல்லுனர்கள் பலர் இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
டிசம்பர் 23 – ‘உழவே தலை’ திருவிழா!
விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்து இயங்கும் இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம் வருடந்தோறும் டிசம்பர் 23ம் தேதியன்று கொண்டாடப்படும் இந்திய விவசாயிகள் தினத்தை இவ்வருடம் முதல் விவசாயிகளைக் கொண்டாடும் வகையில் ”உழவே தலை” என்ற பெயரில் மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடப் போகின்றது.
நவம்பர் 19 – 60 ஏக்கர் நிலப்பரப்பில் மரம் நடும் விழா!
வரும் நவம்பர் 19-ஆம் தேதி திண்டிவனம் அருகேயுள்ள ஆவணிப்பூர் எனும் இடத்தில 60 ஏக்கர் நிலப்பரப்பில் மரம் நடும் நிகழ்வை ‘இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்’ மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ளது.
நகரங்களில் வாழும் சிலருக்கு மரம் நட வளர்க்க வேண்டும் என ஆசை இருக்கும்.ஆனால் அவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாமல் இருக்கும். அப்படி ஆர்வமுள்ளவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மரம் நடலாம். குடும்பத்தினருடனும் கலந்து கொள்ளலாம்.
அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை ‘இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்’ இலவசமாகவே ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் இருந்து செல்ல விருப்பமுள்ளவர்கள் இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பதிவுசெய்துகொள்ளலாம். திரு.பாட்ஷா – 77081 17744.
விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி பெருகினால் அது எல்லா உயிர்களுக்கும் ஆதாரமான விவசாயத்தொழிலையே பாதிக்கும். எனவே இவர்கள் இருவரையும் பாரம்பரிய அறிவு கலந்த நவீன விவசாய யுக்திகளின் மூலம் இணைக்கும் பாலமே இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்.