தேவர்மகன் திரைப்படத்தின் சிறப்பான திருப்புமுனை காட்சி இதுதான்..
அந்த படத்தில் எத்தனையோ காட்சிகள் இருந்தாலும் தலையில் வேப்ப எண்ணெய் வைத்து படிய தலைவாரிய கிராமத்து பெண் பஞ்சவர்ணத்துக்கு லண்டன் மாப்பிள்ளை சக்தி எப்படி திருமணம் செய்துக்கொண்டான்.. அவன் காதலை துறந்து முதலில் எப்படி ஒத்துக்கொண்டான்… என்ற கேள்வி படம் பார்த்துக்கொண்டு இருக்கும் எல்லோரும் தோனும் விஷயம்தான்..
சக்தி அந்த முடிவை எடுக்க நியாமான காரணம் அழுத்தம் திருத்தமாக இருக்க வேண்டும்…
அது மட்டுமல்ல பஞ்சவர்ணத்தை சின்ன வயதில் கம்பு சுத்த வரும் போது பார்த்து இருக்கின்றான்.
சக்தி பஞ்சவர்ணத்தை திருமணம் செய்துக்கொள்ள கொடுத்த வாக்கை காப்பாற்ற திருணம் செய்துக்கொண்டானா?
அதுவும் ஒரு காரணம்தான்… ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை…
ரேவதி அழுது பேசும் வசனம் ஒரு காரணம்.. சக்திக்குள்ள இருந்த ஒரு கிரமாத்தான் முழித்துக்கொள்ளவும் அந்த திருமணம் நடக்கவும் அதுவும் ஒரு காரணம்..…
ரேவதி பேசி அழுது இருக்கிவில்லை என்றால் இந்த கல்யாணம் நடந்து இருக்காது..
ரேவதி என்ன சொல்லுவார்…???
என்னை ஒரு வார்த்தை கேட்காம ஆம்பளைங்களா சேர்ந்து முடிவு பண்ணிட்டிங்க… ஆத்தான்னு ஒருத்தி இருந்து இருந்தா இப்படி நடந்து இருக்குமா?- பொம்பளை இல்லாத வீடு இல்லை அதான் கேப்பாறு இல்லைன்னு சீரழிச்சிபுட்டிங்க என்று கதறுவார்..
பஞ்சவர்ணம் அழுத இந்த அழுகை மட்டும் காரணம் இல்லை.. ஆனால் பஞ்சவர்ணம் பேசிய வார்த்தைகள் சக்தியை அந்த முடிவை எடுக்க தோனி இருக்கும்…
அப்படி என்ன வார்த்தை என்பதை பின்னுட்டத்தில் தெரிவியுங்கள் அல்லது வீடியோ பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள் வழக்கம் போல வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்.
#TheverMagan25
#thevermagan
#Kamalhaasan #revathi #gowthami
https://www.youtube.com/watch?v=wB0KWODN7-g&t=3s