First On Line Release Indian Film Karma Director Arvind With Jackiesekar

நான் நிறைய பேரை நான் இண்டர்வியூ பண்ணி இருக்கேன்… அதே போல என்னை இன்டர்வியூ பண்ணி இருக்காங்க… பத்திரிக்கையாளர்கள் சந்திப்புகளில் கேள்விகளை முன் வைப்பது என் வழக்கம்.

ஆனால் ஒரு புரொபஷனல் செட்டப்பில் ஒரு நேர்கானல் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை…

அது நேற்று நிறைவேறியது… பெசன்ட் நகர் பீச் அருகே இருக்கும் பார்கெர்மென் ஷாப்பில் ஒரு பிரண்டிலி டாக்காக கர்மா திரைப்படத்தின் இயக்குனரை நேர்கானல் செய்தேன்…

கர்மா திரைப்படம் ஆன்லைனில் ரிலிஸ் செய்யப்பட்ட முதல் இந்திய தமிழ் திரைப்படம். ஒரே ஒரு அறை இரண்டு கதாபாத்திரங்கள்.. அதுவும் மர்டர் மிஸ்ட்ரி… இது போன்ற மினிமிலிஸ்ட் பில்ம் என்று அழைப்பார்கள் தமிழில் முதல் முயற்சி.. தற்போது அமேசான் பிரைமில் கிடைக்கின்றது.. விரைவில் டாடா ஸ்கையில் வெளியாக இருக்கின்றது.

இந்த நேர்கானல் எந்த அளவுக்கு நன்றாக வந்து இருக்கின்றது என்பதை நீங்கள்தான் பார்த்து விட்டு கருத்து கூற வேண்டும்… பெரிதாய் கேள்விகளை தயாரித்துக்கொள்ளவில்லை… என்ன தோன்றியதோ அதையே பேசி இருக்கன்றேன்.

கொஞ்சம் எக்சைட்மென்ட் ஆனது நிஜம்… சரியாக இருக்க வேண்டும் என்று உள்ளங்கை வியர்வை பிசுபிசுத்தது.

நல்ல பேக்ரவுண்ட் நல்ல லைட்டிங் இருந்தால் நான் கூட ரசிக்கும் படி இருப்பேன் போல.. கேமரா குழுவினருக்கு என் நன்றிகள் மற்றும் அர்விந்த அவர்களின் உதவி இயக்குனர்கள் மற்றும் பெர்கர்மேன் ஷாப் நிர்வாகத்திற்கும் என் நன்றிகள்.

ஜாக்கி சினிமாசின் அடுத்த கட்டத்திற்கான முதல் படி இது என்று கூட சொல்லலாம்.. நட்பாய் ஒத்துழைத்த நண்பரும் இயக்குனருமான அர்விந்துக்கு என் அன்பும் நன்றியும்.

வீடியோ பிடித்து இருந்தால் வழக்கம் போல ஷேர் செய்யவும்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
29/10/2017

https://www.youtube.com/watch?v=J9Cm3UQs8j4