Thevar Magan – 25 Years

ஒரு சில திரைப்படங்களை பார்க்கும் போது அந்த கேரக்டர்களுடன் ரிலேட் ஆகி விடுவேன்… தேவர் மகன் வந்து 25 வருடம் ஆகி விட்டது.. ஆனாலும் அந்த அப்பா மகன் ரிலேஷன்ஷிப் ரொம்பவே பிடிக்கும்..

முதல் பையன் தண்ணி வண்டி… லண்டனுக்கு அனுப்பி படிக்க வச்ச இரண்டாவது புள்ளையோ.. மாவட்டற பிசினஸ் தெலுங்கு பொண்ணு சைட்டு அது இதுன்னு சுத்திக்கிட்டு இருக்கான்..

நமக்கு பிறகு நம்ம பயலுகளை பார்த்துப்பான்னு பார்த்தா எப்ப பார்த்தாலும் ஊரை விட்டு போறேன் போறேன்னு சொல்லற….. மீசையும் தாடியுமா வளர்ந்த பையனை இழுத்து வச்சிக்கவா முடியும்?

ஒரு பத்துநாள் இந்த அப்பன்கூட இரு அப்புன்னு கெஞ்சதான் முடியும்…

ஆனாலும் பையன் போகவேண்டும் என்று விடாப்பிடியாக இருக்க அந்த கிராமத்து கிழவன் பிள்ளை பாசத்தில் கதறி அழுவதும்… அவன் மழையில் கொஞ்சம் சருக்க… அவன் அறைக்கு செல்லும் வரை பார்த்து இருத்தலும் கவிதையானவை…
எல்லாவற்றையும் விட டிக்கெட் கேன்சல் செய்ய சொன்னதும்… அப்படியே மகனின் கையை இறுக்க பற்றி மார்பில் வைத்துக்கொள்வது எல்லாம் கவிதை. அதுவும் ராஜாவின் பின்னனி இசை அந்த காட்சிக்கு இன்னும் பலம் சேர்த்து இருக்கும்.
எங்க அப்பாவுக்கு பாசம் இருக்கும் ஒரு நாளும் வெளிக்காட்டிக்கொண்டது.. அப்பா என்னை அனைத்து கொஞ்சிய ஒரே ஒரு காட்சி கூட என் நினைவு அடுக்கில் இல்லை.. அதனாலோ என்னவோ இந்த காட்சி என்னை வெகுவாக கவர்ந்து விட்டு இருக்கக்கூடும்.

படம் வந்து 25 வருடங்கள் ஆகி விட்டன.. இப்போதுதான் கடலூர் கிருஷ்ணாலாயாவில் படம் பார்த்து விட்டு சைக்கிள் எடுத்து படத்தின் காட்சிகளை அசைப்போட்டுக்கொண்டே வீட்டுக்கு வந்தது போல இருக்கின்றது..

காலம் என்பவன் பெரும் மாயகள்வன்

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

 

https://www.youtube.com/watch?v=e6hFrLYaFlA&feature=youtu.be