50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கும் படம் “ 5 ஜி “

பிலிம் இன்டஸ்டிரி டிப்ரன்லி ஏபில்டு ஆர்டிஸ்ட் வெல்பேர் அசோசியேஷன் ( FIDAAWA ) உலக மாற்றுத்திறன் கலைஞர்களுக்கான முதல் சினிமா சங்கம் இது.

இந்த சங்கத்தின் சார்பில் 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கும் “ 5G “ என்ற படத்தை தங்கள் ( FIDAAWA ) அமைப்பின் சார்பில் தயாரிக்கிறார்கள்.

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் பிறந்த மாற்றுத்திறன் கலைஞர் கே.பி.ராஜபாலாஜி.எம்.ஏ இந்த திரைப்படத்தினை இயக்க உள்ளார். உலக மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து மனித நேயத்தை உருவாக்கவே இந்த திரைப்படம் உருவாகப்படுகிறது.

இந்த படத்தில் தமிழ் திரையுலக நடிகர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தங்களின் மனிதநேயத்தை வெளிபடுத்த இத்திரைப்படத்தில் பணியாற்ற உள்ளனர்.
படம் பற்றிய முழு விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

உலக மாற்றுத்திறனாளிகளின் தினமான டிசம்பர் 3 அன்று இந்த திரைப்படம் துவங்க உள்ளது.

Previous articleMaragathakkaadu Movie Stills
Next articleIppadai Vellum Movie Stills