அப்துல் கலாம் பிறந்தநாளில் விவேக் அவர்களின் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நமது முன்னாள் குடியரசுதலைவர் மேதகு.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் 86 வது பிறந்த நாளை முன்னிட்டு சாய் பிரசன்னா அறக்கட்டளை மற்றும் பசுமைக் கலாம் அமைப்பின் சார்பாக நடக்க இருக்கிறது. இந்த மரக்கன்றுகளை நடிகர் விவேக் நட இருக்கிறார்.

சென்னையின் பல பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட இருக்கிறது. காலை15.10.2017 ஞாயிறு அன்று காலை சரியாக ஏழு மணிக்கு எம்.ஜி.ஆர். அவர்களின் ராமாவரம் தோட்டத்தில் தொடங்கி கே.கே.நகர், அசோக் நகர், அடையாறு, பெசண்ட் நகர், ஆர்.ஏ.புரம், போட் கிளப், ஆர்.கே.சாலை, நந்தனம், நூறடி சாலை, சைதாப்பேட்டை, லேக் ஏரியா, மேத்தா நகர், சேத்பட், ராயப்பேட்டை, சி.ஜி.காலனி. ஆகிய இடங்களில் இந்த 86 மரக்கன்றுகளை நடுகிறார். இது அத்தனையும் உரிய நபர்களால் பாதுகாக்கும்படியும், பராமரிக்கும்படியும் ஏற்பாடு செய்யப்பட்டுல்ளது.

காலை ஏழு மணிக்கு எம்.ஜி.ஆர். தோட்டத்திலும், காலை ஒன்பது மணிக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களர்கள் சந்திப்பு நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

நடிகர் விவேக் 2010 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரைக்கும் 28 லட்சத்து தொண்ணூறாயிரம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார். அப்துல்கலாம் இவருக்கு கொடுத்த இலக்குபடி ஒரு கோடியை நோக்கி இவரது பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இவண்

சாய் பிரசன்னா மற்றும் பசுமைக்கலாம் அமைப்பு.

Previous articleKaadhal Solla Lyric Video – Ticket Tamil Movie
Next articleUnakkaaga Vaazhkiren Album Launch Photos