If Govt Fixed Rates Are Not Followed Can We Watch Movies in Thiruttu VCD??

திருட்டுவிசிடியில் படம் பார்த்து எங்க உழைப்பை திருடுகின்றார்கள் எங்கள் ரத்ததை உறுஞ்சுகின்றார்கள்

என்று ஒப்பாரி வைக்கும் திரையுலகினருக்கு…
ஒரே ஒரு கேள்வியை முன் வைக்கின்றேன்… பத்து வருடமாக டிக்கெட் கட்டணம் ஏற்றவில்லை.. அதனால் பொட்டி வாங்கிய விலை கட்டுபடியாகவில்லை
என்று இஷ்டத்துக்கு டிக்கெட் கட்டணத்தை ஏற்றீனீர்கள்…. இனி அரசு நிர்ணயத்தை விலையை தவிர்த்து டிக்கெட் விலையை பெரிய நடிகர்களின் 
திரைப்படங்கள் ரிலிசின் போல ஆயிரம் 500 ரூபாய் வாங்காமல் அரசு நிர்ணியத்த கட்டணத்தை மட்டும் வசூலித்தால்

இனி யாரும் திருட்டி விசிடியில் பார்த்து எங்கள் உழைப்பை சுரண்ட வேண்டாம் என்று குரல் கொடுங்கள்..

ஆனால் ரசிகனின் ஆர்வத்தை முதல் நாள் முதல் காட்சியில் காசுக்குவதோடு தொடர்ந்து டிக்கெட் விலையை தமிழகத்தின்
மற்ற நகரங்களில் இஷ்டத்துக்கு டிக்கெட் விலையை ஏற்றி வைத்து விட்டு… அவனிடம் இருந்து அநியாயமாக பணத்தை புடுங்குவதை என்றைக்காவது கண்டித்து இருக்கின்றீர்களா?

உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா?,?

உங்களுடையது மட்டும்தான் உழைப்பு ரசிகன் என்ன தினமும் கொள்ளையா அடிக்கறான்.. அவன்து வியர்வை இல்லையா?-

திருட்டு விசிடியில படம் பார்க்கறது எவ்வனவு தப்போ அதே போல அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட அதிகமாக வாங்கறதும் தப்புதான்…

நீங்க முதல்ல கட்டணத்தை நியாயமா வாங்கிட்டு திருட்டு விசிடிக்கு எதிரா குரல் கொடுங்க.. என்னைக்காவது தமிழ் திரையுலகமோ.. – ? பெரிய நடிகர்களோ?- தயாரிப்பாளர் சங்கமோ… மக்களிடம் கொள்ளை அடிப்பதற்கு எதிரா பேசி இருப்பாங்களா?

கவனிச்சி பார்த்திங்கன்னா…. எல்லாரும் திருட்டிவிசிடியில் படம் பார்க்காதிங்க தியேட்டர்ல வந்து படம் பாருங்கன்னு மட்டும்தான் சொல்லி இருப்பாங்க… ஆனா முதல் நாள் தியேட்டரில் அடிக்கும் கொள்ளை பற்றி யாரும் மூச்சு கூட விட்டதில்லை.

எல்லோருடைய ரத்தமும் ஒரே நிறம்தான்…..

https://www.youtube.com/watch?v=CjKqWDGm9AQ