Hara Hara Mahadevaki Movie Review By Jackiesekar | Jackiecinemas

ஹர ஹர மகாதேவகி திரைவிமர்சனம்???????????????????????????????????????????????????????????????????????????????
நாங்க ஏ படம்தான் எடுத்து இருக்கோம்ன்னு தைரியமா சொன்னதோடு சென்சார் குருப்புக்கு லஞ்சம் கொடுத்து ஐஸ் வச்சி யூ சர்ட்டிபிகேட்டோ அல்லது யூஏ வாங்காம ஏ சர்ட்டிபினேட் கொடுக்க அந்த படம்தான் எடுத்துக்கு இருக்கோம்ன்னு தைரியமா சொன்ன படக்குழுவினருக்கு முதலில் ஜாக்கிசினிமாஸ் சார்பாக வாழ்த்துகள்.

ஹர ஹர மகாதேவகி படத்தோட கதை என்ன?
நிக்கி கவுதம் ரெண்டு பேரும் காதலர்கள்.. இரண்டு பேருக்கும் பிர்ச்சனை பிரேக் அப் பண்ணி பிரியலாம்ன்னு நினைக்கும் போது அவங்க அவங்க வாங்கி கொடுத்த பொருளை கொடுத்துட்டு பிரியலாம்ன்னு நினைக்கும் போது பெரிய பிரச்சனைகளை சந்திக்கிறாங்க.. அவுங்க பிரிஞ்சாங்களா இல்லையா என்பதுதான் கதை.
கவுதம் கார்த்திக் பாடி பத்தி சொல்லும் சிங்கிள் ஷாட்டில் அசத்தி இருக்கின்றார்.. அதே போல டான்ஸ் ஆடும் போது தரை லோக்கலுக்கு இறங்கி ஆடி ,இருக்கின்றார்.
நிக்கிகல்ராணி… அழகாய் கும் என்று இருக்கின்றார்.. ஆனாலும் அவர் டெய்லி ஒர்க் அவுட் செய்ய வேண்டும்.. சின்ன தொப்பை அவருக்கு அழகை கொடுக்கின்றது… என்றாலும் அலட்சியமாக விட்டால் நினைத்து பார்க்கவே கிலி ஏற்படுத்துகின்றது.. அதனால் அவர் ஒர்க் அவுட்டில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
சதிஷ்கவுதமோடு காமெடி செய்கின்றார் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றார்… மொட்டை மற்றும் கருணாகரன் அசத்தி இருக்கின்றார்கள்… முக்கியமாக ஐட்டம் வீட்டில் இருக்கும் போது தியேட்டர் சிரிப்பலையில் மூழ்குகின்றது.
அமெரிக்கன் பை மற்றும் செக்ஸ் ஈஸ் ஜிரோ திரைப்படங்கள் போல இருக்கும் என்று நினைத்தேன்.. டிரைலரில் காட்டிய விஷயங்கள்தான் படத்தில் இன்டர்வெல்லுக்கு பிறகு கதை காட்டேஜூக்கு போகும் போது ஒரு 20 நிமிட சிரிப்பு கேரண்ட்டி நிச்சயம்..
யாருடா மகேஷ் லெவலில்தான் படத்தை எடுத்து வைத்து இருக்கின்றார்கள்.

Hara-Hara-Mahadevaki-Movie-First-Look-Posters-2
இருப்பினும் நித்தியானந்தா அன்டு பாஸ்டர் சொற்பொழிவுகளை கலாய்த்து இருக்கின்றார்கள். ஆயா சூத்துல பீன்னு ஒரு இங்கிலிஸ் பாட்டு சோசியல் மீடியாவுல பரவிக்கிட்டு இருந்துச்சி.. அதை நியாபகபடுத்தும் விதமா.. ஆயா சோத்துல கை என்று பாடி இருக்கின்றார்கள்..
மொத்தத்தில் இந்த திரைப்படம் சோசியல் மீடியாவில் பயணிப்பவர்களுக்கு இந்த படத்தில் வரும் ஜோக் மற்றும் இன்னபிற விஷயங்களை உடனே ரிலேட் பண்ணி சிரிக்க முடியும்… மொபைல் போன் மற்றும் சோஷியல் மீடியாவில் டிராவல் ஆகாதவர்கள் மற்றவர்கள் சிரிப்பதையும் அவர்களை வாயையும் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை.
ரவிமிரியா பாம்பு ஜோக் எல்லாம்அரத பழசானது ஆனாலும் ஓகே ரகம்தான்…
ஹர ஹர மகாதேவகி திரைப்படத்தின் டபுள் மீனிங் ஜோக்குகள் எல்லாம் ஆண்குறியை மையப்படுத்தியே இருக்கின்றன… பெண்குறி இன்னும் புனிதபிம்பமாகவே பார்க்கப்பட்டுள்ளது…


காமத்தில் வெட்கம் பார்த்தால் வேலைக்கு ஆகாது… வெட்கத்தை கலைந்தாலே காமமும் காதலும் சிறக்கும்.
டபுள் மீனிங் ஜோக் என்று வந்து பிறகு ஆண் என்ன பெண் என்ன??? ஆனாலும் தமிழ் சினிமா இன்னும் கலாச்சார போர்வையில் நடித்துக்கொண்டே வெகுதூரம் பயணிக்க வேண்டும்.
ஆனாலும் பிரன்ட்சோடு ஜாலியாக ஹர ஹர மகாதேவகி படம் பார்க்கும் போது அரட்டை அடித்து மகிழலாம். சந்தோஷ் பி ஜெயக்குமார் இந்த படத்துல கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் அடுத்த படத்தில் இறக்குங்க…
வெயிட்டிங்
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

 

https://youtu.be/WSCRNLp-J0M

Previous articleVICTORIA & ABDUL – Official Trailer
Next articleதொடர்ந்து நடிப்பேன் மு.களஞ்சியம்