Karuppan – Movie Review By Jackiesekar

DE_qxebVwAEQwPx

பி அண்டு சி ஆடியன்ஸ்சுன்னு ஒருத்தன் இருக்கான் ஆப் சோசியல் மீடியா எல்லாம் தெரியாம திரைப்படம் மட்டுமே பொழுது போக்காக கொண்டவனுக்கு இங்கே படம் பண்ண யாரும் இல்லை… ராஜ்கிரன் ராமராஜன் காலத்தோடு முடிந்து போனாலும் சசிக்குமார் அந்த வேலையை சிறப்பாக அவ்வப்போது செய்து வருகின்றார்..
அந்த இடத்துக்கு விஜய் சேதுபதியும் துண்டு போட வந்து இருக்கும் திரைப்படம் இந்த கருப்பன்.
கருப்பன் திரைப்படத்தின் கதை என்பது அடித்து புழிந்து துவைத்து காய போட்ட தமிழ்சினிமாவின் வழமையான நம்பிக்கை துரோகத்து கதைதான் என்பதில் மாற்றம் இல்லை.. ஆனால் பிரசன்ட் பண்ண விதத்தில் ஜெயித்து இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும்.
விஜய் சேதுபதி சான்சே இல்லை.. பின்னு இருக்கின்றார் மனுஷன்… அந்த பார் சீன் ராவடியில் இருந்து உன்னை ஏன் எனக்கு பிடிச்சது தெரியுமா? என்று விஜய் சேதுபதி சொல்லும் காட்சியில் விஜய் சேதுபதியின் நடிப்பு சான்சே இல்லை.
தன்யா இப்படி ஒரு பொண்டாட்டி கிடைச்சா எப்படி இருக்கும் அப்படின்னு நினைக்க வைக்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க..
பாபி சிம்ஹாவை தவிற அப்படி ஒஒரு நடிப்பை யாராலும் வெளிப்படுத்தி இருக்க முடியாது… பசுபதி எண்ணைய் தேய்த்து குளிக்கும் காட்சியில் மனைவியிடம் தன் எண்ணவோட்டத்தை வெளிப்படுத்தும் காட்சியில் அசத்தி இருக்கின்றார்..
விஜய் சேதிபதி பார்ல் பண்ணற அலைப்பறை அப்புறம் பொண்டாட்டி கர்பம்னு ஆஸ்பிட்டல்ல அடிக்கும் கூத்து யப்பா சான்சே இல்லை.
எனக்கு ஒரே கவலை… ஏற்கனவே எனக்கு தெரிஞ்ச பெண்கள் அத்தனையும் விஜய்சேதுபதி பைத்தியம் பிடிச்சு அலையறதுகள்… இந்த படத்துக்கு அப்புறம் இன்னும் அதிகமா இருக்குமே என்ற காண்டுதான்…
வீடி விஜயன் எடிட்டிங்ல கிளைமாக்ஸ் பைட் ஒன்னு போதும்… அதே போல இமானின் இசை படத்துக்கு பெரிய பலம் அதே போல கருவா கருவா பயலே… சாங் யுகபாராதியின் வரியும் சேஷா திருபதி மற்றும் சங்கர் மகாதேவன் குரலில் குழைந்து இருக்கின்றார்கள்..
சக்திவேலின் லைட்டிங் அவ்சம்.. முக்கியமாக முதல் மல்யுத்த சண்டையில் இருந்து பர்ஸ்நைட் சாங் வரை அசத்தி இருக்கின்றார்கள்..
பன்னீர் செல்வம் அற்புதமான இயக்கத்தில் இந்த படத்தை ரசித்து எடுத்து இருக்கின்றார் வாழ்த்துக்கள்
கணவனை நேசிக்கும் மனைவியும் மனைவியை நேசிக்கும் கணவனும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் கருப்பன்.

 

 

https://youtu.be/_-gh0A0BOuw

Previous articleMeyaadha Maan Audio Release at Loyola College Photos
Next articleActor Mammootty To Revealed The DhaDha87 Motion Poster