தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் திவ்யாவை திருமணம் செய்ய உள்ளார். தாரை தப்பட்டை படம் மூலம் நடிகர் ஆனவர் தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான ஆர்.கே. சுரேஷ். மருது, தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்த சுரேஷ் தற்போது பிசியான நடிகர்.
இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, எனக்கும் சுமங்கலி சீரியல் புகழ் நடிகை திவ்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது பெரியவர்களாக பார்த்து முடிவு செய்த திருமணம். எனக்கு திவ்யாவை மிகவும் பிடித்துள்ளது. திவ்யாவும் என்னை போன்றே ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்றார்.