‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலை பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா – 2′ போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா.
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா. இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். எண்ணிக்கை என்ன ரொம்ப கம்மியா இருக்குன்னு நினைக்குறீங்களா? அதுக்கான பதிலையும் அவரே சொல்லிட்டாருன்னா பாருங்களேன்.
சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர் தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது.
உங்களுக்குள்ள நல்ல திறமை இருக்கே டக்கு டக்குன்னு அடுத்தடுத்த படங்களை புக் செஞ்சிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியது என்ற கேள்விக்கும் அற்புதமான பதிலை தருகிறார் சத்யா.
நீங்க சொல்றதும் சரிதான் சார், கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் எனக்கு வந்துச்சு, படத்துல கமிட் ஆகுறது விஷயமில்ல, ஆனால் சரியான நேரத்துல பாடல்களும், பின்னணி இசையும் என்னால தர முடியுமான்னு ஒரு யோசனை வந்துட்டே இருந்தது. இதனால் பல படங்களை நான் தவிர்த்துவிட்டேன்.
ஆனா இனி என்னுடைய வேலையை இன்னும் வேகமாக்கியுள்ளேன். இதனால் பெரிய ஹிரோக்களின் படங்களுக்கு சரியான நேரத்தில் என்னால் அவுட்புட் தர முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் சத்யா.
தற்போது விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி நடித்துக் கொண்டிருக்கும் ”பக்கா” படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் பெரும்பாலான பகுதி திருவிழா செட்டப் இருப்பது போலவே இருக்கும். இதுவரைக்கும் பல கரகாட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் பார்த்திருப்பீங்க. ஆனால் பக்கா படத்தில் ஒரு கரகாட்ட பாடல் இருக்கு அது முற்றிலும் மாறுபட்ட புதுவித அனுபவத்தை தரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சத்யா.
இத்துடன் அசுரகுலம், பயமா இருக்கு ஆகிய படங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்கிறார் மகிழ்ச்சியுடன்.
“பயமா இருக்கு” படத்தில் வரும் மயிலு பாடல் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி முதல் முறையாக அந்தோனிதாஸ் காதல் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.