இன்னைக்கு எல்லாம் ஒரு கொலை நடக்கின்றது என்றால்.. செத்தவனின் அல்லது சந்தேகப்படுபவனின் போனை வாங்கி கடைசி ஒரு மாத இன்கமிங் அவுட் கோயிங் கால்களை செக் செய்தாலே குற்றவாளி மிக எளிதாக மாட்டிக்கொள்வான்..
ஆனால் 1970களில் அப்படி அல்ல…
கொலை நடந்தால் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க தலையால் தண்ணி குடிக்க வேண்டும். அதுவும் ஸ்மார்ட்டான கொலைக்காரன் என்றால் தாவு தீர்ந்து விடும்.
ஒரு கொலை நடந்து உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்து தடயங்கள் சேகரித்து கோர்ட்டில் படி ஏறி அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதற்குள் ஏழு மலை ஏழு கடலுக்கு அந்த பக்கம் இருக்கும் கிளியின் உயிரைக்கூட எடுத்து வந்து விடலாம். அந்த அளவுக்கு தாவு தீர்ந்து விடும் மேட்டராக இருந்தகாலகட்டம் அது.
போலந்து நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது..
அவன் ஒரு கொலைக்காரன்… கொலைக்காரன் என்றால் சைக்கோ கொலைக்காரன். கொலைசெய்வது அவன் பொழுது போக்கு… இரவு நேரம்தான் அவனுக்கு ஏற்ற நேரம்.
16 வயசு டீன் ஏஜ் பொண்ணுல இருந்து 58 வயசு கிழவி வரைக்கும் யாரா இருந்தாலும் அவனுக்கு கவலை இல்லை…
உடைகள் களைய பட்டு இருக்கும் … ஆனால் ரேப் செய்து இருக்கமாட்டான்.
பிங்கர் பிரிண்ட் வாய்ப்பே இல்லை..
கையில கிளவுஸ் போட்டுக்கிட்டுதான் கொலை செய்வான். ஷு சைஸ் 42 அது மட்டும்தான் போலந்து போலிசுக்கு தெரியும்
கொலைகாரனை பார்த்த ஒரே ஐ விட்னஸ் ஒரு கிழவி.. அதுக்கும் கண்ணுல கோளாறு… மழை ராத்திரி… ஒரு கண்ணுல மைனஸ் 9 ஒரு கண்ணுல மைனஸ் 7 அதனால் ஐ விட்னஸ்ல கிளாரிட்டி இல்லை.
கொலைக்காரனுக்கு உயர்ந்த நோக்கம் இருக்கு…
30 பேரை சாவடிப்பது அவனுடைய கோல்… அதனால் ஒரு பத்து பேரை போட்டு தள்ளியதும் காவல் துறைக்கு லட்டர் எழுதுவது அவன் வழக்கம்.
ஒரு நாள் இல்லை மூன்று நாள் இல்லை… மூனு வருஷம் போலந்து போலிஸ் கண்ணுல விரல் விட்டு ஆட்டிக்கிட்டு இருக்கான்…
எந்தனையோ போலிஸ் அபீசர்
கேஸ் கட்டை கையில எடுத்து பப்பு வேகாம தலையை தொங்க போட்டு இந்த கேசை சால்வ் செய்ய முடியலைன்னு தோல்வியை ஒப்புத்துக்கிட்டு போயிட்டாங்க…
போலந்து கவர்மென்டுக்கும் சரி போலிசுக்கு சரி கவுர கொறச்சலா ஆயிடுச்சி… பத்திரிக்கையில எழுதி கிழி கிழின்னு கிழிச்சி தொங்க விட்டுட்டானுங்க… போலந்து போலிஸ் ங்கோத்தா இந்த கொலைக்காரனை கண்டுபிடிச்சே அவனும்டான்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருக்காங்க…
அப்பதான் அந்த கேசை ஒரு யங் டிடெக்ட்டிவ் கிட்ட கொடுக்கறாங்க… அவன் நேர்மையானவன்… அந்த கொலைக்காரனை கண்டுபிடிச்சே அகனும்ன்னு கங்கனம் கட்டிக்கிட்டு ரப்பாகலா உழைக்கிறான்..
அந்த கேசை அவன் கண்டுபிடிச்சானா? இல்லையா என்பதே ஐ யம் ஏ கில்லர் 2016 போலந்து திரைப்படத்தின் கதை.
கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு ஒரு படம் சான்சே இல்லை .. இந்த படம் பார்க்கும் போது அந்த படம்தான் நினைவுக்கு வந்துச்சி.
எல்லா ஊர்லேயும் அதிகார வர்கம் நினைச்சா அப்பாவிங்க கதி அதோ கதிததான் என்பதை இந்த திரைப்படம் செருப்பால் அடிச்சி சொல்லும்.. அதே நேரத்துல நேர்மையா இருக்கறவங்க சூழ்நிலை காரணமாக வாயில குச்சி ஐஸ் வச்சி சப்பிக்கிட்டு வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும்ன்னு சொல்லாமல் சொல்லும் திரைப்படம் இந்த திரைப்படம்…
இந்த படத்துல கம்யூட்டர் வரும் காட்சி ஒன்று உண்டு… அறைமுழுக்க வியாபித்துக்கொண்டு இருக்கும் அதன் மூலமாக குற்றவாளியை கண்டுபிடிக்கலாம் என்று சொல்லுவார்கள்.. அது மட்டுமல்ல குற்றவாளிகளின் லிஸ்ட்டை தரம் பிரிக்கும் வேலையை செய்வார்கள். செம காமெடியாக இருக்கும்.. இன்று பார்க்க அப்படி இருந்தாலும் ஒரு 40 வருடத்துக்கு முன்பு அது பெரிய விஷயம் அல்லவா-?
படத்தோட மியூசிக் பத்தி சொல்லனும்… ஒரே ஒரு டிரம்ஸ்தான்… அதுலதான் பின்னனி இசை கோர்வை செஞ்சி இருக்காங்க.. அடிச்சி தூள் கௌப்பி இருக்காங்க.. சான்சே இல்லை.
கிளைமாக்ஸ் அப்படியே அடி வயத்துல குத்தினது போல இருக்கும் ஒரு ரெண்டு நாளைக்கு இந்த திரைப்படத்தின் காட்சிகள் நம்ம கண் முன் வந்து போவும் அதான் இந்த படத்தின் வெற்றி
பார்த்தே தீர வேண்டிய உலக திரைப்படம் இந்த ஐ யம் ய கில்லர்.
https://youtu.be/kFpbn8VTDQE