துப்பறிவாளன்
தமிழில் துப்பறியும் கதைகளும் கேரகடர்களும் அதிகம்… தமிழ்வாணன், சங்கர்லால் கணேஷ் வசந்த், நரேன் வைஜெயந்தி, விவேக் ரூபலா, பரத் சுசிலா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆங்கிலத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் இப்படியான பெயர்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பரிட்சயமிருந்தால் மிஷ்கினின் இந்த துப்பறிவாளன் திரைப்படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்..
முகமுடி திரைப்படமே தமிழில் ஏன் இப்படியாக கற்பனை காதாபாத்திரங்கள் உலவுவதில்லை என்ற தாக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்.. ஆனால் அந்த திரைப்படம் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை… எனக்கு அந்த படம் பிடித்து இருந்தது.
இந்த படம் தமிழில் துப்பறியும் கதைகள் ஏன் வரவில்லை என்ற தாக்கத்தில் இந்த திரைப்படமும் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.. ஆனால் அதில் வெற்றி பெற்று இருக்கின்றார் மிஷ்கின்.
துப்பறிவாளன் திரைப்படத்தின் கதை என்ன?
கணேஷ் வசந்த் போல விஷாலும் பிரசன்னாவும் துப்பறிகின்றவர்கள்… அவர்களிடம் ஒரு வித்தியாசமான கேஸ் வருகின்றது.. தனது நாய் கொல்லப்பட்டு விட்டது.. அந்த நாயை கொன்றவர்களை கண்டு பிடித்து கொடுக்க வேண்டும் என்று ஒரு சிறுவன் விஷாலிடம் உதவி கேட்கிறான்..
விஷால் அந்த பையனின் துக்குடா கேசை எடுத்துக்கொண்டாரா..? அப்படியே எடுத்த அந்த கேசில் வெற்றி பெற்றாரா? இல்லையா என்பதுதான் துப்பறிவாளன் திரைப்படத்தின் கதை.
கணேஷ் வசந்த் போல விஷாலும் பிரசன்னாவும் துப்பறிகின்றவர்கள்… விஷால் அவருடைய கேரியரில் இந்த திரைப்படம் அவருடைய பெஸ்ட் என்று சொல்லலாம்.. முட்டி போட்டு கதறும் இடத்தில் உருகவைக்கும் அதே நேரத்தில் புள்ளி விவரம் சொல்லும் இடங்களில் ரசிக்க வைக்கின்றார்.
பிரசன்னா செம ரோல் பாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கின்றார். அதே போல வினய் பாக்கியராஜ் ஆண்டிரியா பின்னி இருக்கின்றார்கள்..
மிஷ்கின் படத்திலேயே அதிக டயலாக் இருக்கும் படம் இதுதான்.. பெரியதாய் லாஜிக் மிஸ்டேக் படத்தில் இல்லை.
நாயை கொன்றவனை கண்டு பிடித்து தர சொல்லும் பையன் சிறப்பாக நடித்து இருந்தான்…
நாயகி அகு இமானுவேல். தனது விழிகளில் நிறைய பேசி உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்துகின்றார்..
மிஷ்கினின் கிளேஷக்கள் இந்த படத்திலும் உண்டு.
அரோல் குரோலியின் பின்னனி இசை படத்துக்கு பெரிய பலம் முக்கியமாக துப்பறியும் இடங்களில் ஒலிக்கும் பின்னனி இசை அருமை
கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு அசத்தல்.. அதே போல விஷால் வீட்டு இன்டிரியர் லைட்டிங் மற்றும் அந்த புக் ஷெல்ப் அசத்தல்…
எழுதி இயக்கி இருக்கின்றார் மிஷ்கின்… முகமுடி படத்தில் விட்டதை பிசாசுவில் பிடித்து இந்த படத்திலும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம் துப்பறிவாளன்.
ரேட்டிங்
4/5
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
https://youtu.be/Wvt575i3V4c