‘ஸ்பைடர்’ படத்தின் இரண்டாம் பாடலான ‘ஆளி ஆளி’ பாடல் இன்று வெளியிடப்பட்டது

பலம் வாய்ந்த கூட்டணியை கொண்ட ‘ஸ்பைடர்’ படம் சினிமா ரசிகர்கள் மேல் தனது வசியத்தை வீசிக்கொண்டே வருகின்றது. இந்த கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பது ஹாரிஸ் ஜெயராஜின் இசை.

இவரின் இசை இப்படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு இவர்கள் வெளியிட்டு வெற்றி பெற்ற ‘பூம் பூம் ‘ பாடல் பெரிய சான்றாக அமைந்தது.

பெரிதும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாடலான ‘ ஆளி ஆளி’ பாடல் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்த Folk பாடலை மெலடி குயின் ஹரிணி மற்றும் ஜோகி சுனிதாவுடன் சேர்ந்து வடஇந்தியாவின் பிரபல பாடகரான பிரிஜேஷ் த்ரிபதி சாண்டில்யா பாடியுள்ளார். திறமையான பாடகர்களின் இந்த கூட்டணி, ஹிட்டுக்கு மேல் ஹிட் கொடுக்கும் லாவகத்தை நன்கு அறிந்த ஹாரிஸ் ஜெயராஜுடன் சேரும் பொழுது நடக்கக்கூடும் மேஜிக்கை ரசிக்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை திரு N.V.பிரசாத் மற்றும் திரு. தாகூர் மது தயாரித்துள்ளனர் . சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ‘ஸ்பைடர்’ உருவாகிவருகிறது. இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ளார். S J சூர்யா, பரத் மற்றும் R J பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Spyder Movie Stills (1) Spyder Movie Stills (2) Spyder Movie Stills (3)

Previous articleவிஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் ‘ஜுங்கா’
Next articleThupparivaalan Review | jackie sekar | jackie cinemas