மாறனை பார்த்து பயப்படுகின்றதா தமிழ் திரையுலகம்??

புளு சர்ட் மாறன்தான் டாக் ஆப் த டவுன்… நியூஸ் மினிட்டில் கட்டுரை எழுதி இருக்கின்றார்கள். 2,1 மில்லியன் வியூவ் விவேகம் ரிவியூவ் சென்று விட்டதாக அஜித் ரசிகர்கள் டென்ஷனில் இருக்கின்றார்கள்..

சில வருடங்களுக்கு முன் மாறன் எனக்கு போன் செய்து பேசி இருக்கின்றார்.. எனது பதிவுகளை படித்து விட்டு உலக சினிமாக்களில் சில சினிமா பதிவுகளை படித்து விட்டு என்னிடம் உரையாடி இருக்கின்றார்.

மாறனின் தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை… ஆயினும் ஒரு சில வீடியோக்கள் பார்த்து இருக்கிறேன்..
ஆடியோவில் அவர் அஜித்தை பற்றி அப்படி பேசி இருக்கவே கூடாது…. இருப்பினும்… விவேகம் படத்தில் முதல் நாள் முதல் ஷோவில் பாதி பேர் தூங்கிக்கொண்டு இருந்தார்கள் என்று அவர் சொன்னது செம காமெடிதான்.

இருப்பினும் தமிழ் சினிமா ஓடாமல் போனதுக்கு மாறன்தான் காரணம் என்று ஒரு கும்பல் கோடம்பாக்கத்தில் கிளம்பி இருக்கின்றது..

ஒட்டு மொத்தமாக அவர் மீது விமர்சனங்கள்… மிரட்டல்கள்… அவர் கருத்து பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை என்று வீடியோவாக போடுங்கள் அதை விடுத்து அவரால் தமிழ் சினிமா பாதிக்கின்றது.. என்பதை ஒரு போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..

ஒரு சினிமா விமர்சகனை நம்பியா தமிழ் சினிமா இருக்கின்றது.. காசு கொடுத்து ஒரு படத்தை பார்த்து விட்டு வெளியே வந்து விமர்சிக்க படம் பார்த்த எல்லோருக்கும் உரிமை இருக்கின்றது.. அந்த கூற்றை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நீராகரிக்கலாம்..

அதை விடுத்து அவரால் படங்கள் ஓடவில்லை என்பது நொன்டி குதிரைக்கு சறுக்குன்னுதான் சாக்கு என்று சொல்லுவார்கள்… அது போல இருக்கின்றது…. இவர்கள் சொல்லும் சப்பை காரணங்கள்.

யார் என்ன சொன்னாலும் என் புள்ளை 100க்கு 100 எடுப்பான்னு சொல்லறவன்தான் உண்மையான படைப்பாளி…. பாகுபலி படத்தை எந்த கொம்பன் நல்லா இல்லை என்று சொல்லி இருந்தாலும் அந்த படம் நிச்சயம் நன்றாக ஓடி இருக்கும்… 1500 கோடியை கலெக்ட் செய்து இருக்கின்றது..

அப்படி பார்த்தால் நன்றாக இருக்கின்றது என்று சொன்ன அன்பே சிவம், ஆரண்யகாண்டம் எல்லாம் வசூலில் சக்கை போடு போட்டு இருக்க வேணடும்..

யார் என்ன விமர்சனத்தை முன் வைத்தாலும் நல்ல படங்கள் ஓடியே தீரும்… இன்னும் நிறைய வீடியோவில் பேசி இருக்கின்றேன்.. உடன்பாடு உண்டு என்றால் வீடியோவை ஷேர் செய்யுங்கள்.

ஒரு விமர்சகனால் ஒரு தொழில் நலிவடைகின்றது என்று சொன்னால் பிரச்சனை எங்கோ இருக்கின்றது என்று அர்த்தம் அதே போல மாறன் மொக்கை என்று சொன்ன பல படங்கள் பட்டையை கிளப்பி இருக்கின்றன..

மாறனின் தனிமனித தாக்குதல் மற்றும் நிறைய கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்றாலும் தமிழ் சினிமா வீழ்ச்சிக்கு அவர் மட்டுமே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது…‘

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

https://www.youtube.com/watch?v=73WC-tbQ-xA

Previous articleமூன்று நாட்களுக்கு பிறகான திரைவிமர்சனம் சாத்தியமா?
Next articleAbhiyum Anuvum Teaser