ஆக்சன் கிங் அர்ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து வழங்கும் “சொல்லிவிடவா”

முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்-2 போன்ற தேசப்பற்றுமிக்க திரைப்படங்களின் நாயகன் ஆக்சன் கிங் அர்ஜுன், எழுதி, இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் “சொல்லிவிடவா”

தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக-முக்கிய வேடத்தில் நடிக்க, தேசப்பற்றோடு காதலையும் சேர்த்து ஒரு புதிய பரிமாணத்தில் படைத்திருக்கிறார்.

தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இத்திரைப்படத்தில், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இணையாக புதுமுகம் சந்தன் குமார் அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்தின் கதைக்களம் வெகு சுவாரசியமானது. இதுவரை காணாத வகையில், ஒரு முற்றிலும் புதிய பின்னணியில் இந்த கதை பயணிக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய வேலையில் உள்ள ஆபத்துகளையும், நெருக்கடிகளையும் தாண்டி, எப்படி தங்கள் காதல் வாழ்விலும் பயணிக்கிறார்கள் என்பதை பிரமிக்கும் வகையில் இத்திரைப்படம் வெகு நேர்த்தியாகப் படம்பிடித்து காட்டியிருக்கிறது.

ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், கதையின் தேவைகேற்ப பெரும் நட்சத்திரங்களான சுகாசினி, இயக்குனர் கே.விஸ்வநாத், பிரகாஷ்ராஜ், மற்றும் பலர் தங்களது இயல்பானப் பங்களிப்பின் மூலம் கதைக்கு வலுசேர்க்கிறார்கள்.

பரபரப்பான காட்சிகளுக்கிடையே “நான் கடவுள்” ராஜேந்திரன், சதீஷ், மற்றும் யோகிபாபுவின் நகைச்சுவை விருந்து, படத்திற்கு இனிமை சேர்க்கிறது.

ஜெஸ்சி கிப்ட் இசை அமைக்க, இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஹரிணி, சத்யபிரகாஷ் மற்றும் கார்த்திக் பாடல்களை பாடியிருக்கிறார்கள். திரைப்படத்தொகுப்பு கே.கே.

மதன் கார்க்கி, விவேகா, பா. விஜய் ஆகியோர் பாடல்களை படைக்க, நடன பயிற்சியை சின்னி பிரகாஷும் கணேஷ் ஆசார்யாவும் கவனித்திருக்கிறார்கள்.

ஹெச் சி வேணுகோபால் ஒளிப்பதிவில் மிளிர்கிறார். சென்னை, தர்மஸ்தலா, ஹைதராபாத், கேரளா மற்றும் வட இந்தியாவில் பல அருமையான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது, காட்சிகளுக்கு மேலும் இனிமை சேர்க்கிறது.

ஆக்சன் கிங் அர்ஜுன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி தயாரிக்கும் சொல்லிவிடவா, வரும் தீபாவளிக்கு வெள்ளித் திரையில் மிளிரும்!!

Previous articleKingsman: The Golden Circle, Releasing On September 22nd In English, Tamil, Telugu And Hindi
Next articleSollividava Movie Stills