சென்னையில் ஒரு நாள் – 2 படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் JPR இயக்கும் படம் சென்னையில் ஒரு நாள் – 2. சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முனிஷ்காந்த், நெப்போலியன், சுஹாசினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் ஒரு பாடலை நாளை மாலை 6.30 மணிக்கு வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். துருவங்கள் 16 படத்தின் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில் உருவான
‘நரம்புகள் புடைக்குதே’ எனும் பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் சரத்குமார் பாடியுள்ளனர்.

Previous articleநான் செய்துள்ள சில சிறந்த கதாபாத்திரங்களில் இந்த ‘பர்னபாஸ்’ கதாபாத்திரம் கண்டிப்பாக ஒன்று – அழகம் பெருமாள்
Next articleA Stroke of Disssonance Short Film Screening Photos