பிக் சினி எக்ஸ்போ 2017 ஒரு பார்வை – Big cine Expo 2017

 

சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில்  கடந்த எட்டு ஒன்பது தேதிகளில்  பிக் சினிமா எக்ஸ்போ 2017 நிகழ்ச்சி நடடைபெற்றது.. எதிர்கால தியேட்டர்கள் நிலை குறித்தும் எப்படி எல்லாம் ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்கலாம் என்பதில் தொடங்கி என்ன என்ன படங்கள் எல்லாம் வசூலை வாரி குவித்தன என்பது வரை இரண்டு நான்  கருத்தரங்கில் அனேக விஷயங்களை பேசி கரைந்தார்கள்…

அது மட்டுமல்ல புரெஜெக்ஷன், சீட், ஆம்பியன்ஸ், ஸ்பீக்கர்ஸ், பார்ப்கான் மெஷின் என்று ஸ்டால்கள் வைத்து  ஏன் நாம் ஒரு தியேட்டர் கட்டக்கூடாது என்னும் அளவுக்கு  கண்காட்சியை கான  வந்தவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினார்கள்.  மிக முக்கியமாக இந்த கண்காட்சி தியேட்டர் ஒனர்களுக்கான கண்காட்சி…    தத்தமது தியேட்டர்களை எந்த வகையில் எல்லாம் மேம்படுத்திக்கொள்ளலாம் என்று  கண்காட்சியில்  மற்றும் கருத்தரங்கில் நிறைய விஷயங்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.

20638856_1692580357442199_2009702101285935269_n

ஆனால் வழக்கம் போல அதிக அளவில் நமது தியேட்டர்  ஓனர்கள் கலந்துக்கொள்ளவில்ல என்பதுதான் பெரும் சோகம். முதல் நான் கருத்தரங்கில் கொலம்பியாவை   சேர்ந்த  சினி கியூ அன் சி   நிறுவனத் செமினார் எடுத்தார்.. ஒரு சின்ன டிவைஸ் வைத்துக்கொண்டு ஒரு தியேட்டரை ஒருவரே நிர்வாகிக்க முடியும் என்று விளக்கினார்..

ஒரு பிரமாண்ட திரையரங்கையே டிரேட் சென்டரில் நிறுவி  இருந்தார்கள்…  இரண்டாம் நாள் கருத்தரங்கில்   தியேட்டர்களை நிர்வாகிக்கும் பெண்கள் அவர்கள்  சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் படம் பார்க்க  வரும் பெண்களின்  நிலை அவர்கள் பாதுகாப்பு குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது..  நிறைய நல்ல விஷயங்கள் கலந்தாலோசிக்க பட்டாலும் அவைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்ததும்…  நமது தியேட்டர் ஓனர்கள்  கொஞ்சம் ஒதுங்கியே இருக்க வைத்தது.. அதே வேளையில் அடுத்த தலைமுறைக்கான தியேட்டர் ஓனர்களின் பிள்ளைகள்  கொஞ்சம் பேர் ஆர்வத்துடன் பங்கு பெற்றார்கள்..

20690428_10209974587862283_4652404970339014736_o

இந்த கருத்தரங்கு மேட்டுக்குடிகளுக்கான மல்ட்டி பிளக்ஸ்களுக்கானது…  இன்னும் பத்து வருடத்தில் இந்த கருத்தரங்கின்  மற்றும் கண்காட்சியின் பயண்  மெல்ல நம்மவர்களுக்கு  புரிய ஆரம்பிக்கும்…

 

ஆனாலும் சென்னையில் இந்த பிக் சினிமா எக்ஸ்போ நல்ல  ஆரம்பம் என்பேன்.. அதே வேளையில் தமிழகத்தின் கடைகோடியில் இருக்கும்  டாக்கிசில் இருந்து தியேட்டருக்கு கன்வெர்ட்  ஆனா தியேட்டர் முதலாளிக்கு இன்னும் புரியும் வகையில்  இந்த கண்காட்சி எதிர்காலத்தில் இன்னும் எளிமை படுத்த வேண்டும் என்பதே ஜாக்கிசினிமாஸ் வைக்கும் முதல் மற்றும் ஒரே கோரிக்கை.

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.