வட சென்னையையும், அங்கு வாழும் ரவுடிகள் , தாதாக்களின் வாழ்வியலையும், அங்கு தாதாக்கள் உருவாகும் சூழலையும் , ‘கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு … ‘எனும் கருவி னூடே சொல்லியிருக்கும் படமே ஆக்கம். கதை : காவல்துறையினரால் , என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளப்பட்ட அப்பாவுக்கும் , கஞ்சா விற்கும் பெண்மணிக்கும் பிறந்தவரான நாயகர் சதீஷ் ராவன் , சட்டத்துக்கு புறம்பாக இல்லீகல் பிஸினஸ் செய்து வரும் சேட்டு ஒருவரின் வலது கரமாக , காசுக்காக கொலை , கொள்ளை .. என சகலத்தையும் செய்து அப்பகுதி வஸ்தாத்தாக வலம் வருகிறார். ,தன்னை நம்பிய பெண்களையும் , நயவஞ்சமாக பேசி அனுபவித்து ஏமாற்றி வரும் வழக்கமுடைய அவர் ., ஒரு கட்டத்தில் , ஈகோ மோதலில் அவரை வளர்த்து விட்ட இல்லீகல் சேட்டையே போட்டுத்தள்ள ., காவல் துறையினர் ., இவரை என்கவுண்ட்டரில் போடத் துரத்துகின்றனர். இறுதியில் வென்றது காவல்துறையா ? கதாநாயகரா …? என்பது தான் “ஆக்கம்”
ஷோக் “அலைஸ்” அஷோக்காக புதுமுகநாயகர் சதீஷ் ராவன்., பெண்கள் விஷயத்தில் செம ஷோக்கு பார்ட்டியாகவும் , ரவுடித்தனத்தில் படா கில்லாடியாகவும் படம் முழுக்க படுபாவியாக வாழ்ந்திருக்கிறார். மீனவ பெண் காதலி ஜெயா வாக டெல்னா டேவிஸ் மிகவும் யதார்த்தமாக, தனது , பாத்திரத்திற்கும் , படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார். திருந்திய தாதாவாக ஏரியா நல்ல மனிதர் ரங்காவாக வரும் நடிகர் ரஞ்சித் செம்ம யாக றடித்திருக்கிறார். சிறையில் ஒத்த குத்து தத்துவப் பாட்டுக்கு வந்து போகும் பவர் ஸ்டார் சீனிவாசன் .. சேட்டைக்கார சேட்டாக வரும் தருண் மாஸ்டர் ,தன் பெண்ணுக்கு அந்த குப்பத்திலேயே நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என அல்லாடும் நாயகியின் குடிகார தந்தையாக வரும் “யோகி” தேவராஜ் , நாயகரின் ரவுடி சகாக்களாக வரும் நண்பர்களும் அந்த ஏரியா வின் அழுக்கு மூட்டைகளாக நாயகருடன் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர் .
ஜி.ஏ.சிவசுந்தரின் ஒளிப்பதிவில் , ஒவ்வொரு காட்சியும் இது ஒரு சிறிய பட்ஜெட் படமென்பதையெல்லாம் தாண்டி , சிறப்பாக ஒளிர்ந்திருக்கிறது . . கும் இருட்டில் மிக சன்னமாக ஒளிர்ந்தபடி வந்து நிற்கும் ஆட்டோ, குப்பை மேட்டில் கவுன்சிலரை ஹீரோ தீர்த்து கட்டும் காட்சி… என சகலத்திலும் இவரது ஒளிப்பதிவு , உயிரோட்ட ஒவியப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா வின் இசையில் ” நின்னவன் மலைமேல நின்னவன் சொன்னவன் அப்பனுக்கே சொன்னவன் … ” ,”சொல்ல சொல்ல ஏதோ சொல்ல … “, “சமரசம் வாழும் இடம் …”, ” தண்ணிப் போட்டா தப்புடா .. “ஆகிய பாடல்களும் … படத்திற்கு பலம் சேர்க்கின்றன. பின்னணி இசையும் மிரட்டல். வேலுதாஸ் ஞானசம்பந்தம் எழுத்து , இயக்கத்தில்., ஒரு சில குறைகளும் ,குளறுபடிகளும் படத்தில் நிரம்பவே தெரிந்தாலும், அழுக்கு சென்னையிலும் அழகான மெஸேஜ் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு ஒரு பெரிய “ஹேட்ஸ் ஆப் ” சொல்லலாம்.