ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்களே பிரதானம்.அதுவும் ஸ்பைடர் போன்ற நாடே எதிர்பார்க்கும் ஒரு படத்துக்கு நல்ல பாடல்கள் மிக மிக முக்கியம்.மகேஷ் பாபு , ராகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, மற்றும் பரத் ஆகியோர் நடிக்க ,முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் ஸ்பைடர் படத்தின் இசைக்கு இசை பிரியர்கள் இடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கூடி வருகிறது என்றால் மிகை ஆகாது.இன்றைய தேதியில் இளைஞர்களின் மத்தியில் மிக பிரபலமாக உள்ள “பூம் பூம்” பாடலின் டீசர் ஆகஸ்ட் 2ஆம் தேதி பாடலாக வெளி வர உள்ளது. நிகிதா காந்தியின் தேனிசை குரலில் உருவாகி உள்ள இந்த பாடல் இந்த வருடத்தின் மிக சிறந்த பாடலாக வரும் என்பதில் ஐயமே இல்லை.