இந்தியாவில் நடத்தபடுகின்ற ஹிப்-ஹாப் நடன போட்டிகளிலேயே, கடந்த 2012ம் ஆண்டு முதல் திரு. அஞ்சன் சிவக்குமார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு வெகு விமரிசையாக நடைபெற்று வரும் “இந்திய ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகள்” மிகவும் பிரபலமானது. இதன் முக்கிய அம்சம் யாதெனில் இதில் வெற்றி பெறுபவர்கள், அமெரிக்காவில் நடைபெறும் உலக ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க பிரதிநிதித்துவம் பெறுகிறார்கள். கடந்த2015ம் ஆண்டு நடைபெற்ற உலக ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கமும், லாஸ் வேகாஸில் 2016ம் ஆண்டில் நான்காவது இடமும், 2012ம் ஆண்டிலேயே இறுதி 8 போட்டியாளர்களில் இடம்பிடித்து சரித்திரம் படைத்துள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் எங்களுக்கு அளித்த உதவியும், ஆதரவும் மிகவும் நன்றியோடும் நெகிழ்ச்சியோடும் நினைவு கூறத்தக்கது. இந்த ஆண்டும் நடைபெறு உள்ள போட்டிகளில் கலந்து கொள்வது சம்பந்தமாக, சென்னை அமெரிக்க தூதரகத்திற்கு செல்ல இருக்கிறோம். இந்த ஆண்டும், அவர்கள் இந்திய நடன கலைஞர்கள் மற்றும் குழுவினர் உலக மேடையில் ஜொலிக்க உதவி புரிவார்கள் என்று திடமாக நம்புகிறோம்.
இந்த ஆண்டிற்கான உலக ஹிப் ஹாப் நடன சாம்பியன்ஷிப் போட்டிகள்,
வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை அமெரிக்காவின் அரிசோனா மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் பெற்ற குழுக்களாக