‘சோலோ’ அனைவரையும் கவரும் படமாக இருக்கும் – The Refex entertainment” நிர்வாக இயக்குநர் அனில் ஜெயின்

எதிர்பாராத ஒரு கூட்டணி அமைந்து அதன் மூலம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குவது தமிழ் திரை உலகில் ஏராளம்.கடந்த காலத்தில் இதற்கு சான்றாக பல படங்கள் அமைந்து உள்ளன. பாலிவுட்டின் திரைக்கதை எழுத்தாளரும், தமிழில் வெளிவந்த ‘டேவிட்’ மற்றும் ஹிந்தியில் வெளிவந்து பேராதரவு பெற்ற ‘ஷைத்தான்’, அமிதாப் பச்சன் நடித்த “வாசிர்” படங்களை இயக்கி இளைய இயக்குனர்களில் கவனிக்கத்தக்கவர் என்று இந்திய திரை உலகம் போற்றும் பெஜோய் நம்பியார். இவர் தற்பொழுது, இளைய தலைமுறையின் தற்போதைய கனவு நாயகனான துல்கர் சல்மானுடன் இணையவுள்ளார். இந்த கூட்டணி சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. இப்படம் குறித்து பெஜாய் நம்பியார் பேசுகையில், ”துல்கர் சல்மான் போன்ற அபரிமிதமான நடிப்பு திறன் கொண்ட ஒரு நடிகருடன் பணிபுரிய ஆவலோடு இருந்தேன். இக்கதையை அவருக்கு கூறியபொழுது, அவரை அது மிகவும் கவர்ந்தது. இருவரும் இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம். இப்படத்திற்கு ‘சோலோ’ என பெயரிட்டுள்ளோம். படப்பிடிப்பு முடிந்து , post productions பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் பற்றிய கூடிய விரைவில் வரப்போகும் அறிவிப்புகளில் நிறைய சுவாரஸ்யமான ஆச்சிரியங்களை எதிர்பாக்கலாம். இந்த படத்தை ‘ The Refex group’ஐ சேரந்த ‘Refex Entertainment’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கார்ப்பரேட் நிறுவனமான ‘The Refex Group’ இப்படம் மூலம் சினிமா தயாரிப்பில் கால்பதிக்கவுள்ளது.

”ஒரு தொழிலாக பார்க்கும் பொழுது சினிமா துறையின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது.சரியான செயல்முறையும் அதற்கான திறமைவாய்ந்த நபர்களும் ஒன்றுசேருவதால் இது லாபகரமான தொழிலாகிறது. மிகப்பெரிய இயக்குனராக எல்லா தகுதிகளையும் கொண்ட பெஜாய் நம்பியாருடன் இணைவதில் எங்களுக்கு மற்றற்ற மகிழ்ச்சி. எல்லை , மொழி வேறுபாடுகளை தாண்டி ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் துல்கர் சல்மானுடன் அவர் இணைவதால் ‘சோலோ’ அனைவரையும் கவரும் படமாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்” என ‘The Refex entertainment” நிர்வாக இயக்குநர் அனில் ஜெயின் கூறினார்.

Previous articlePuthiya Alaigal Election Campaign Video Song Released By Director Vetrimaaran
Next articleSpyder Images