Vikram Vedha Movie Review By Jackiesekar

விக்ரமாதித்யன் வேதாளத்தை முறுங்கை மரத்தில் இருந்து வெட்டி தோளில் போட்டுக்கொண்டு நடக்க… வேதாளம் கதை சொல்லும்… கதை முடிவில் வேதாளம் விக்ரமாதித்யனிடம் கேள்வி கேட்கும்.. பதில் தெரியாமல் விக்ரமாதித்தன் முழிக்க வேதாளம் மீண்டும் முறுங்கை மரம் ஏற. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் என்ற கதை சுழன்று கொண்டே இருக்கும்…

மேல இருக்கும் கதையை பேஸ் பண்ணி புஷ்கர் காயத்ரி தம்பதிகள் சிறப்பாக திரைக்கதை அமைத்து இருகின்றார்கள்.

ஆரண்யகாண்டம் திரைப்படத்துக்கு பிறகு அதிகம் பிசிறில்லாமல் வெளி வந்து இருக்கும் கேங்ஸ்டர் திரைப்படம் விக்ரம் வேதா…

படத்தின் கதை.. விக்ரமாதித்யன்…விக்ரம் மேடி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், வேதளாம் விஜய்சேதுபதி பெரிய ரவடி. கைது பண்ணினால் விஜய் சேதுபதி கதை சொல்ல மேடிக்கு பதில் தெரியாமல் விழிக்க இந்த இரண்டு பேரின் ஆடுபுலியாட்டம்தான் இந்த திரைப்படத்தின் கதை.

மாதவன் இன்ட்ரோ சீன் மற்றும் விஜய் சேதுபதியின் வடை இன்ட்ரோ சீன் செமை. டோன்ட மிஸ் இட்.

வரலக்ஷ்மி சரத்குமார் உடம்பு போட்டு இருக்கின்றார்… விஷால் சொன்ன லக்ஷ்மிகரமானவங்களா மாற கொஞ்சம் உடம்தை குறைத்தே ஆக வேண்டும்…
கதிர் உடைகள் அவிழ்க்க கண்ணில் காதல் காட்டும் இடத்தில் வரு விஷாலுக்கு பிறகு நமக்கும் பிடித்து போகின்றார்.

ஷாரதா ஸ்ரீநாத்… மாதவனிட மூன்று மாசம் ஆச்சி இன்னும் அன் பாக்சிங் பண்ணவேயில்லை என்று சொல்லும் காட்சியில் அவர்கள் இருவரின் காமத்தோடு நமது காமத்தையும் நினைவு படத்தும் காட்சி அழகியல்..

டயலாக்ஸ் செம..
போட தெரியாதவனுக்கு எதுக்கு பொருளு…—-???

முட்டை உடைஞ்சிடுச்சின்னா… முட்டை ஒடிஞ்சிடுச்சின்னு கவலைபடாம… ஆம்லேட் ஆப்பாயில்ன்னு போட்டு சாப்பிட்டனும்..
இன்ட்ரேகேஷன் காட்சியில் அவனை சாகடித்து இருக்க கூடாது என்று விஜய் சேதுபதியும்… சைமன் செத்துட்டான்னு பொண்டாட்டிக்கிட்ட கண்களில் சொல்லி மாதவன் உடையும் இடமும் நடிப்பு சான்றான

சாம் சீ எஸ் இசையில் வாழ்க்கை சாங் வரும் போது தியேட்டரில் கர ஒலி…
வினோத் பிஎஸ்சின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலமும் லைவ்லி நஸ்சும் கொடுக்கின்றது.
ரிச்செர்ட் கெவின் சண்டை காட்சிகளில் கிரிஸ்ப்பாக கவனம் செலுத்தி விறு விறுப்பை அதிகபடுத்தி இருக்கின்றார்.. உதாரணத்துக்கு பர்ஸ் என் கவுண்டர்… சீன்கள். கச்சிதம்.

புஷ்கர் காயத்திரி ஒரு சிறப்பான கேங்ஸ்டர் படத்தை கொடுத்து ரசிக்க வைத்தமைக்கு டிக்கெட் விலையேற்றத்தை பற்றி பொருட்படுத்தாமல் தியேட்டரில் போய் பார்த்து ரசித்து விட்டு வரலாம்.

https://www.youtube.com/watch?v=coYAoGI7nYA

Previous articleTamil Cinema Top Ten Upcoming Talent Young Music Directors
Next articleSivaji Memorable Day Discussion With Jackiesekar