A R முருகதாஸ், மகேஷ் பாபு மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிவது எனது கனவாகும் – பிரிஜேஷ் சாண்டில்யா

121

A R முருகதாஸ்- மகேஷ் பாபுவின் மாபெரும் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘ஸ்பைடர்’. இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் ஒருவரான A R முருகதாஸும் , தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான மகேஷ் பாபுவும் இணைந்து இருப்பதால் இப்படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஹிந்தி பட உலகில் சக்கை போடு போட்ட ‘தனு வெட்ஸ் மனு:ரிட்டர்ன்ஸ்’ படத்தில் மாபெரும் ஹிட்டான ‘பண்ணோ’ பாடலை பாடி புகழின் உச்சிக்கு சென்றுள்ள பாடகர் பிரிஜேஷ் சாண்டில்ய , ‘ஸ்பைடர்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது சிறப்பு செய்தியாகும்.

இது குறித்து பிரிஜேஷ் சாண்டில்யா பேசுகையில், ”A R முருகதாஸ், மகேஷ் பாபு மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிவது எனது கனவாகும். சினிமாவில் பல சாதனைகளை செய்துள்ள இவர்கள் இன்னமும் எளிமையாக இருப்பதை கண்டு வியந்தேன். இந்த வாய்ப்பினை எனக்கு அளித்ததிற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இசைக்கு மொழிகளோ எல்லைகளோ இல்லவே இல்லை என்பதை நம்பும் எனக்கு, இப்பாடல் மூலம் தென்னிந்தியா சினிமாவில் நுழைவதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஹாரிஸ் ஜெயராஜ் சாரின் இசையில் நான் பாடியிருக்கும் இப்பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. இது ஒரு மாபெரும் ஹிட் பாடல் ஆகும் என உறுதியாக கூறுவேன். இசை பற்றியும் அதன் நுணுக்கங்கள் பற்றியும் ஹாரிஸ் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு பெருமை. இப்பாடல் ரசிகர்களை நிச்சயம் கவர்ந்து மயக்கும் என நம்புகிறேன் ‘.’

Previous articleமிக மிக அவசரம்… பெண் போலீசாருக்கு சமர்ப்பிக்கும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி!
Next articleVikram Vedha – Tasakku Tasakku Video Song Promo