பவர்ஸ்டார், யோகிபாபு, கஞ்சாகருப்பு கூட்டணியில் நான் யார் தெரியுமா புதியபடம்!

பவர்ஸ்டார் சீனிவாசன் யோகிபாபு, கஞ்சாகருப்பு மூவருடன் முக்கியவேடத்தில் சங்கவி நடிக்கும் படத்திற்கு ” நான் யார் தெரியுமா ” என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இதில் ரோஷன், சேஷு, அர்ஷிதா, மெர்க்குரிசத்யா, கே.பி.சங்கர், ஜீவிதா, சினேகாராஜன், கே.பி.செந்தில்குமார், போண்டாமணி, திருலோக், வி.ராஜா ஆர்.ஸ்டாலின், கிங்காங்,ரமணாதேவி, எம்.ஆர்.ஜி.ராஜேஷ்வரி,மயிலைதேவி, வீரமணி, காதர்உசைன், ஆகியோரும் நடிக்கிறார்கள்

சொற்கோ பாடல் எழுத ரஷாந்த் இசைமீட்ட சந்திரன்சாமி ஒளியூட்ட கிளாமர் சினிகைடு நிறுவனம் தயாரிக்கிறது.

காவல் துறை அதிகாரிகளாக வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வரும் மூவர் வாழ்விலும் ஒரு பெண் பேய் குறுக்கிடுகிறது அந்த பேய் இவர்களை போலீஸ் அதிகாரிகளாக்க மூன்று நிபந்தனைகளை போடுகிறது. நிபந்தனைகளை சவாலாக ஏற்றுக்கொண்டு போராடும் அவர்களின் அவஸ்தைகளை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் “நான் யார் தெரியுமா” என்கிறார் இதில் இயக்குனராக அறிமுகமாகும் நவீன்ராஜ்.

Previous articleKaaviyyan – Motion Poster
Next articleKaaviyyan Motion Poster Launch Photos