‘விருச்சககாந்த்’ திற்கு உதவிய நடிகர் அபி சரவணன்!

235

கடந்த ஒரு வாரமாக காதல் படத்தில் நடித்த ‘விருச்சககாந்த்’ சென்னையில் உள்ள ஒரு கோவிலில் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார், திரையுலகம் அவரை கண்டு கொள்ளுமா என செய்திகள் வந்து கொண்டிருந்தது..

கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ‘வேகத்தடை ‘ குறும்பட நிகழ்ச்சி திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த அபி சரவணன் கூடவே நடிகர் ‘விருச்சககாந்த்’ அவர்களையும் அழைத்து வந்து அவருக்கு தேவையான சில உதவிகளை செய்தார்..நேற்றும் ‘உறுதிகொள்’ ஆடியோ விழாவில் ‘விருச்சககாந்த்’ அவர்களுக்கு ஒரு காசோலையை அளித்தார்.

நிகழ்ச்சி முடிந்து சென்ற வரை.. சில மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் உங்களை பார்க்க முடிந்தது .. இன்னைக்கு ‘விருச்சககாந்த்’ அவர்களுக்கு உதவி .. சொல்லுங்க.. இவரை எப்படி தொடர்பு கொண்டீங்க என்ற போது…

அவரின் பதில் அப்படியே..

முதலில் இதற்கு காரணமான அண்ணன் சாய் தீனா & மோகன் அவர்களுக்கு நன்றி!

மனதை ஒருவாரமாக உறுத்திகொண்டிருந்த ஒரு செய்தி.. பிச்சை எடுத்த நடிகர் ‘விருச்சககாந்த்”.

அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்தும் இயலாத நிலையில் வாட்ஸ்அப்பில் அண்ணன் சாய்தீனா அவர்களுடன் வீடியோவாக கண்டேன். உடனடியாக சாய்தீனா.அண்ணனை தொடர்புகொண்டேன். மோகன் அவர்கள் உதவியுடன்… அவரிடம் பேசி என்ன மாதிரியான உதவிகள் தேவை என கேட்டறிந்தேன்.மன இறுக்கம் காரணமாக மட்டுமே அவர் இப்படி ஆனதாகவும் அவருக்கு தேவை..

சினிமாவில் நல்ல வாய்ப்பும் ..
தங்க இடமும் ..
தொடர்புகொள்ள ஒரு மொபைல்போனும் ..
நல்ல உடையும் போதும் என்றார்…

சரியாக மாலை நான்கு மணிக்கு தான் தகவல் கிடைத்தது.

இன்று மாலை ஆர்.கேவி யில் ஒரு குறும்படத்தின் வெளியீடுக்காக சிறப்புவிருந்தினராக ஆறுமணிக்கு செல்ல வேண்டியிருந்தது… எனவே விழா நடைபைறும் இடத்திற்க்கு விருச்சிககாந்த் அவர்களை வரவழைத்தேன். அந்த விழா மேடையில் உடனடி அவருக்கு தேவையான ஒரு புதிய சாம்சுங் ஆண்ட்ராய்டு மொபைல் போனும். ஒரு செட் சர்ட்ம் ஐிுன்ஸ்ம் நானும் நண்பர் ‘ஓவியா’ எனும் படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான காண்டீபனும் இணைந்து வழங்கினோம்.

தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் எனது படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு தகவலை கூறியவுடன்… நாளையே அவருக்கான நடிப்பு வாய்ப்பை வழங்கினார்..

மேலும் அடுத்த வாரமே தொடங்க இருக்கும் எனது புதுப்படமான “சூறாவளி”யின் இயக்குனர் குமார்நந்தாவும் ‘விருச்சிகாந்த்’ நடிக்க வாய்ப்பு உடனே வழங்கினார்… இன்றும் அண்ணன் மன்சூரலிகான் எனது வேண்டுகோளை ஏற்று அவரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார்.

மேலும் பெங்களூருவை சேர்ந்த பேஷன் டிசைனர் ‘கிரிஷ்’, விருச்சிககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதோடு அவரை மாடலாகவும் பயன்படுத்தி கொள்கிறேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.

சக நடிகரான ‘விருச்சிக காந்த்’ அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை உடனடியாக சில மணி நேரத்திற்குள் செய்ய உதவிய இறைவனுக்கு நன்றிகள் என்கிறார் அபி சரவணன் மிக மகிழ்ச்சியோடு….

Previous articleInbam Endra Bodhaiyaale Short Film Launch Photos
Next article3RD YEAR OF 24AM STUDIOS