URU Movie Review

கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடிக்கும், விக்கி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் இந்த உரு. வையம் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துள்ளார்.

கலையரசன், தன்ஷிகா இருவரும் கணவன், மனைவி. இதில் கலையரசன் ஒரு எழுத்தாளர். அவருடைய கதைகளை யாரும் ஏற்று கொள்ளாததால் தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும் திரில்லர் கதைகளை எழுத முடிவெடுத்து, மேகமலை செல்கிறார்.

அவர் கதையில் கற்பனையாக உருவாக்கும் முகமூடி சைக்கோ கதாபாத்திரம் உண்மையாக மாறி கலையரசனை துரத்துகிறது. சில நாட்கள் கலையரசனிடமிருந்து தகவல் வராததால் மேகமலைக்கு வரும் தன்ஷிகாவையும் முகமூடி அணிந்த சைக்கோ கொலையாளி கொலை செய்ய முயற்சி செய்கிறது. சாய் தன்ஷிகா தப்பித்து தன் உயிரை காப்பாற்றிக் ;கொண்டாரா? கலையரசன் என்ன ஆனார்? இயக்குனர் விக்கி ஆனந்த் மீதி படத்தின் கதையை மிகவும் விறு விறுப்பாகவும் நிறைய திருப்பங்களுடன் சொல்லிருக்கிறார்.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கலையரசன், இப்படத்திலும் அதனை பின்பற்றி இருக்கிறார். அதே கண்கள், எய்தவனை தொடர்ந்து தற்போது உருவும் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும். தன்ஷிகாவும் தன் கதாபாத்திரம் உணர்ந்து படம் முழுவதும் சிறப்பாக நடித்துள்ளார். மைம் கோபி தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயபாலன் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதையை முயற்சி செய்துள்ள இயக்குநர் விக்கி ஆனந்த்துக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். உரு வழக்கமாக வரும் ஹாரர் படங்களை போல் இல்லாமல், ஒரு புதுமையான திரைக்கதையில் விறுவிறுப்புடன் இயக்கி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. பிரசன்னாவின் ஒளிப்பதிவும், ஜோஹனின் பின்னணி இசையும் மிரட்டல். உரு படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

– Jackie Cinema Team