நடிகர் தனுஷ் தயாரிப்பில் ” காலா ” சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பா.இரஞ்சித் இயக்குகிறார்

176

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 164 ஆவது படத்துக்கு காலா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே 28 ஆம் தேதி அன்று மும்பையில் தொடங்குகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் காலா படத்தை, பா.இரஞ்சித் இயக்குகிறார். லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வளர்ந்து வரும் 2.0 படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் இது.

நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படம் தொடங்கி, தனுஷ் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ப.பாண்டி வரை 11 படங்களைத் தயாரித்திருக்கிறது.

இவற்றில் எதிர்நீச்சல், வி.ஐ.பி., மாரி, தங்கமகன், நானும் ரௌடிதான், காக்கி சட்டை, அம்மா கணக்கு ஆகிய கமர்ஷியல் படங்களும், தேசிய விருது பெற்ற காக்காமுட்டை, விசாரணை ஆகிய படங்களும் அடக்கம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் 12 ஆவது படம்.
அட்டகத்தி, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி ஆகிய வெற்றிப்படங்களை அடுத்து பா.இரஞ்சித் இயக்கும் படம் இது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஒரே இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்தான். அவருக்குப் பின் இந்தப்பெருமையைப் பெற்றுள்ள இயக்குநர் பா.இரஞ்சித் மட்டுமே. காலா படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். இவர்களுடன், ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே தலைவர் 164 படத்தில் நடிக்கிறது.

இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணையும் நான்காவது படம் இது. கபிலன், உமாதேவி பாடல்கள் எழுதுகின்றனர். மெட்ராஸ், கபாலி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி, இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை இயக்கம் – டி.ராமலிங்கம்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
சவுண்ட் டிசைனர் – ஆண்டனி பி ஜெயரூபன்
கிரியேட்டிவ் டிசைனர் – வின்சி ராஜ்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், சுபிகா
காஸ்ட்யூம்ஸ் – செல்வம்
ஒப்பனை – பானு பாஷ்யம், ராஜா
ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா
நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், ஆர். ராகேஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மே 28 ஆம் தேதி மும்பையில் தொடங்கி தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறுகிறது.
எழுத்து, இயக்கம் : பா.இரஞ்சித் தயாரிப்பு: வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்

Previous articleKaala Working Stills
Next articleமேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர். எல்.ரவி இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் நமீதாகதாநாயகியாக நடிக்கும் ஹாரர் படம்