மே 30ஆம் தேதி ரங்கூன் இசை வெளியீடு

157

எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “ரங்கூன்” படத்தின் முன்னோட்டம் மிக குறைந்த காலத்தில் 2.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று  கௌதம் கார்த்திக் நடித்த படங்களிலே அதிகம் பேர் பார்த்து ரசித்த ட்ரைலர் உள்ள படம் என்கிற பெயரை பெறுகிறது.மும்பையை சேர்ந்த கதாநாயகி சனா மகபூல் ரசிகர்களின் மனதை தனது தோற்ற பொலிவால் எல்லோர் மனதையும் வெகுவாக கவர்ந்து விட்டார் என சொல்லலாம்.பர்மா நாட்டில் யாரும் படம் பிடிக்காத இடங்களில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ( இயக்குனர் முருகதாசின் உதவியாளர்) சிரத்தை எடுத்து படம் பிடித்தது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அனிருத்தின் குரல் வளத்தில் பாடி உள்ள foreign return என்கிற பாடல் ஏற்கனவே பெரும் ஹிட். அடுத்தாக இன்று வெளி வர உள்ள பாடல்  விஷால் சந்திரசேகர் பாடல்கள் ரசிகர்கள் மனதை நிச்சயம் கவரும்.எங்கேயும் எப்போதும்,  ராஜா பிராணி ஆகிய வெற்றி படங்களின் மூலம் தனி முத்திரை பதித்த fox star ஸ்டுடியோஸ்  இயக்குனர் முருகதாஸின் கூட்டணி “ரங்கூன்” படம் மூலம் மீண்டும் வெற்றியை அடைவது நிச்சயம் .

Previous articleMunnodi Press Meet Stills
Next articleRangoon Movie Stills