350 கோடி வியாபாரத்தில் பிரபாஸின் “சாஹோ”

166

தற்போது 1500 கோடி வசூலையும் தாண்டி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமான பாகுபிலியில் கதாநாயகனாக நடித்த அனைத்து ரக ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்று இந்திய அளவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் நடிகர் பிரபாஸ்.

பிரபாஸ் தற்போது UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோ தயாரிப்பில் சங்கர்-இசான்-லாய் இசையில் மதி ஓளிப்பதிவில் சூஜித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்படவுள்ள “சாஹோ” திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.

தற்போது “சாஹோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு வேளைகள் நடந்து கொண்டிருக்கின்ற சமயத்தில், பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாலிவுட் நிறுவனம் இப்படத்தின் அனைத்து இந்திய உரிமைகளை 350 கோடிக்கு விலைக்குக் கேட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறியுள்ளன.

இந்நிலையில், படம் துவங்கும் முன்னரே கோடிக் கணக்கில் லாபத்தை ஈன்ற போகும் படம் எனும் பெருமை சாஹோ படத்திற்குக் கிடைக்கவுள்ளது.

Previous articleSuperstar Rajinikanth Fans Meet Day 5 Photos
Next articleCelebrities at Inayathalam Premiere Show Pics