அமேரா தஸ்தூர் ஆட்டம் பாட்டத்தை பார்த்து மெய் மறந்த சந்தானம்

133

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொடர்ந்து பிரபு தேவா நடிக்கும் “ எங்க மங் சங் “ படத்தையும் தயாரித்து வருகிறார்கள். தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமேரா தஸ்தூர் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், பாலாஜி பாஸ்கி, யோகிபாபு, மதுசூதனன் ராவ், மயில்சாமி, பஞ்சுசுப்பு, ராதாமணி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

ஓடி ஓடி உழைக்கணும் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. சமீபத்தில் அமேரா தஸ்தூர் ஜாலியாக ஆடி பாடிய பாடல் காட்சி ஒன்று சென்னை செம்மொழிப் பூங்காவில் அசோக்ராஜா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. அவர் ஜாலியாக ஆடிப்பாடும் அழகை சந்தானம் மெய்மறந்து ரசித்த காட்சியையும் படமாக்கினர். ஜாலியான ஒரு கதையை படமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றி பட இயக்குனர் கே.எஸ்.மணிகண்டன் .

Previous articleவிஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96 பிரேம் குமார் இயக்குகிறார்
Next articleYung Mung Sung Movie Stills