ஆண்டுகள் பல கடந்தும் தனது கடுமையான உடல் பயிற்சி மற்றும் நல்லொழுக்கம் மூலம் இளமை குன்றாத தோற்றம் கொண்ட Action King அர்ஜுன் passion ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்தின் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், மற்றும் அருண் வைத்ய நாதன் தயாரிக்கும் ‘ நிபுணன்’ படம் முலமாக தந்து 150 ஆவது படத்தை பூர்த்தி செய்கிறார்.
‘அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை தயாரித்து இயக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..150 படங்களையும் கடந்த அவரது உன்னத உழைப்புக்கும், சற்றும் குறையாத அவரது உற்சாகத்துக்கும் ஈடு இணை இல்லை என்று தான் சொல்லுவேன்.அவர்து சாதனையை கொண்டாடும் விதமாக ‘நிபுணன்’ படக் குழுவினர் இந்தப் படத்தின் டீசரை 150 திரை உலக பிரபலங்கள் மூலமாக ட்வீட் செய்து வாழ்த்த வேண்டும் என திட்டமிட்டோம். ஆயினும் எங்களுள் ஒரு தயக்கம், இது சாத்தியமா,நடக்குமா, அவ்வாறு ட்வீட் செய்ய அவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்ற ஐயத்தோடு தான் அவர்களை அணுகினோம். அர்ஜுன் சார் மேல் திரை உலக கலைஞர்கள் வைத்து இருக்கும் மரியாதை என்னவென்று நாங்கள் அறிந்துக் கொண்ட தருணம் இது. நாங்கள் அணுகிய திரை உலக கலைஞர்கள் எல்லோரும் உடனடியாக ஒப்புக் கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்னர், அர்ஜுன் சார் உட்பட எங்கள் படக் குழுவினர் ரஜினி காந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற சென்றோம். அப்போது அவர் ‘நிபுணன்’ படத்தின் டீசரை பார்த்தார். மிக மிக உற்சாகமாகி எங்களை பாராட்டினார். ‘This is sure shot winner’ என்று அவருக்கே உரிய பாணியில் பாராட்டியதோடு , படம் வெளிவரும் நேரம் தான் நிச்சயம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்தார். அர்ஜுன் சாருக்கும் , ரஜினி சாருக்கும் இருந்த பரஸ்பர அன்பையும் மரியாதையையும் கண்டு நாங்கள் வியந்துப் போனோம். நிபுணன் டீசர் வருகின்ற 15ஆம் தேதி வெளி வர உள்ளது. அர்ஜுன் சாருடைய உழைப்பை கொண்டாட எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன் என்று பெருமையோடுக் கூறினார் இயக்குனர் அருண் வைத்ய நாதன்.