அட்லீயின் A for apple நிறுவனம் fox star ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பில் ஜீவா , ஸ்ரீ திவ்யா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவை தொற படத்துக்கு தணிக்கை குழுவினர் UA சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
“கோடை கால விடுமுறைக்கு ஏற்றவாறு ரசிகர்களுக்கு உற்ற விருந்தாக சங்கிலி புங்கிலி கதவ தொற அமையும் என்று இயக்குனர் ஜக் தெரிவித்தார்.வர்த்தக ரீதியான விஷயங்களை கோர்வையாக்கி ரசிகர்களுக்கும், திரை வர்த்தகத்தினருக்கும் மிக சிறந்த படமாக வழங்கி இருக்கிறோம். ரசிகர்கள் அச்சப்பட்டும் அதே சமயம் தீவிர நகைச்சுவை தாக்குதலுக்கும் உள்ளாவார்கள் என்பது உறுதி” எனக் கூறுகிறார் இயக்குநர் ஜக்.