குளோபல் இன்போடெய்ன்மெண்ட் திரு. S. மைக்கேல் ராயப்பன் அவர்கள் பெருமையுடன் தயாரித்து வழங்கும், ஜீவா நடிப்பில் உருவாகும் ‘கீ’

நட்பின் பெருமையை பேசும் ‘நாடோடிகள்‘, விளையாட்டை அடிப்படையாக கொண்ட ‘ஈட்டி‘ மற்றும் ஹாரர் படமான ‘மிருதன்‘ போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்த குளோபல் இன்போடெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம், தற்போது STR நடிக்கும் ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்‘ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த படைப்பாக ஜீவா நடிப்பில் உருவாகவிருக்கும் படம் ‘கீ‘ , இந்நிறுவனத்தின் 10 –வது படைப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மற்றும் இரண்டாம் நாயகியாக அணைகா சோடி நடிக்கின்றனர். இவர்களுடன் R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுஹாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி மே 20 ல் முடிவடைகிறது. மொத்த படப்பிடிப்பும் ஒரேக் கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் ஜீவாவின் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற‘ படம் மே மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்

ஜீவா

நிக்கி கல்ராணி

அணைகா சோடி

R.J.பாலாஜி

பத்ம சூர்யா

ராஜேந்திர பிரசாத் ,

சுஹாசினி ,

மனோ பாலா ,

மீரா கிருஷ்ணன்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் – காலீஸ்

இசை – விஷால் சந்திரசேகர்

ஒளிப்பதிவு – அனிஷ் தருண் குமார்

படத்தொகுப்பு – நாகூரன்

தயாரிப்பு – எஸ். மைக்கேல் ராயப்பன், செராபின் ராய செவியர்.

நிர்வாக தயாரிப்பு – ராஜேந்திரன்

தயாரிப்பு நிறுவனம் – குளோபல் இன்போடெய்ன்மெண்ட்

கலை – அசோக்

நடனம் – ‘பாபா‘ பாஸ்கர்

ஆடை வடிவமைப்பு – ஜாய் கிரிஸில்டா, சாரா

Previous articleAlien Covenant – Releasing on May 12th in English and Tamil
Next articleChennai 2 Singapore Teaser