ஜெகதீஸ், மார்ச் 31,ஆம் தேதி வெளியாகி இருக்கும் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” திரைப்படத்தில் நான்கு கதா நாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆன ஜெகதீஸ் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” பட வாய்ப்பு குறித்து கூறுகையில், “ஓர் நாள் மணிரத்னம் அவர்களின் இணை இயக்குனர் தினேக்ஷ் செல்வராக்ஷ் அவர்களிடமிருந்து ஒரு போன், அவரை சென்று பார்த்தப் பின் தான் தெரிந்தது, திரு.தினேக்ஷ் அவர்கள் தனது படத்திற்கு திறமையான ஒரு புதுமுகம் தேடியபோது வினோதினி வைத்தியனாதன் அதற்கு உதவியதாகவும் தெரிந்தது, மொத்த குழுவும் திறமையான புதுமுகங்கள் எனவே யோசிக்காமல் இயக்குனரிடம் தன்னை ஒப்படைத்ததாக கூறினார்.
மேலும் இந்த “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” திரைப்படம், தமிழில் உருவாகும் முதல் “கிரவுட் பண்டட்” திரைப்படம் ஆகும். 75க்கும் மேற்பட்ட புது தயாரிப்பாளர்கள் உதவியுடன் உருவாகும் திரைப்படம்.
ஜெகதீஸ் தனது முதல் படம் முடியும் முன்னரே திருமதி.ஜானகி விஸ்வனாதன் (தேசிய விருது இயக்குனர்) அவர்களுடைய படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிக்க நாடக அனுபவும் மிக்க திறமையான புதிய தமிழ் முகம் தேடி அழைக்க அப்படமும் முடிந்து திரைக்கு வர உள்ளது. அதே படத்தில் ஜெகதீஸின் கவிதை திறமை பற்றி அறிந்த ஜானகி விஸ்வனாதன், அவரை பாடாலாசிரியனாகவும் அறிமுகம் செய்கிறார்.
இவர் மேலும் “ஈக்ஷா” என்ற தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் கதா நாயகனாக நடிக்கிறார், இதன் இயக்குனர் “சமீர்” நான்கு தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர் (பிளாக் ஹார்ட் குறும்படம்) ,இதில் கிட்டதட்ட 350 பேர்கள் ஆடிக்ஷன் செய்து ஜெகதீஸை கண்டு பிடித்ததாக தெரிவித்தார். இப்படத்தின் ஸூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது.
இவர் தனது இஞ்சினியர் படிப்பிற்கு பின்னர் தனது முழு நேர வேலையை நாடகம் மற்றும் நடிப்பு , எழுத்து மீது கொண்ட பற்றினால் முழு நேர கலைஞரானார், இவர் தியேட்டர் “ஒய்” மற்றும் “லிட்டில் தியேட்டர்” மற்றும் சென்னை முழுவதும் உள்ள பிற குழுவினர்களுடன் கடந்த ஐந்து வருடங்களாக விடாது பணியாற்றினார். இவை அல்லாது இயக்குனர் திரு.ராஜிவ் மேனன் அவர்களுடன் துணை இயக்குனராக 2015-2016 ஆண்டுகளில் பணியாற்றினார்.
திறமையாளர்களை தமிழ் திரை உலகம் என்றும் கைவிட்டதில்லை.ஜெகதீஸ் வெற்றி பெற வாழ்த்துவோம்.