மார்ச் 25 கேரளா மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் ஆரி

மாறுவோம்!
மாற்றுவோம்! விழிப்புணர்வு அறப்போராட்டம்!!.

நாடு முழுவதும் நடக்கும் வங்கிகளின் கட்டணக் கொள்கையை எதிர்த்து “அஞ்சல் துறைக்கு மாறுவோம் வங்கிக்கொள்ளையை மாற்றுவோம்”

திரைப்பட நடிகர் ஆரியின் தலைமையில் மாணவர்களின் விழிப்புணர்வு அறப்போராட்டம் தமிழகத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா தலைமை தபால் நிலைத்தில் நடைபெற்றதை தொடர்ந்து 25ம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுலத்தில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் Rajavinte makan என்கின்ற படத்தின் புகழ்பெற்ற கேரள இயக்குனர் Thampi kannanthanam அவர்களும் நடிகர் ஆரி தலைமையில் கலந்து கொண்டு தங்கள் அஞ்சல் கணக்கு துவங்கி மக்களிடம் அஞ்சல் கணக்கு துவங்குவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தமிழகத்தில் நடிகர் ஆரி தலைமையில் துவங்கிய இந்த அறப்போர் மாநிலம் தாண்டி பெரிய வெற்றியை அடைந்துள்ளதது,

கேரளாவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயக்கடனை ரத்து செய்யும் கோரிக்கையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

இவ்விரு போரட்டத்தின் வெற்றி நாடு முழுதும் பரவியது, இதனைத்தொடர்ந்து இந்த அறவழி போராட்டம் இந்திய முழுவதும் பரப்ப திரைப்பட நடிகர் ஆரி திட்டமிட்டுள்ளார்

நாளை முதல் இந்தியாவிலுள்ள மக்கள் அனைவரும் அஞ்சல் வங்கிக் கணக்கினை தொடங்குமாறு வலியுறுத்தி ஒட்டு மொத்த சாமானிய மக்களின் நலனுக்காக நாம் நடத்தும் அறவழி விழிப்புணர்வு போராட்டம்…………….. தொடரும்.

“அஞ்சல் வங்கிக் கணக்கிற்கு மாறுவோம்;வங்கிக்கொள்ளையை மாற்றுவோம்”

Previous articleOru Kidayin karunai Manu is officially selected for the New York Indian Film Festival
Next articleலஷ்மி மேனனின் தந்தையாக சித்ரா லட்சுமணன்