தாயம் திரை விமர்சனம்

ஒரு பெரிய பிரைவேட் கம்பெனியின் சி இஒ அதிகாரி வேலைக்கு இன்டர்வியூ வந்த மூன்று இளம் பெண்கள் ஐந்து இளைஞர்கள் உள்ளிட்ட எட்டு பேர் , ஒரு அமானுஷ்ய அறைக்குள் அடைக்கப்படுகின்றனர். ஒரு மணி நேர கால அவகாசத்தில் அந்த அமானுஷ்ய அறையிலிருந்து யார் உயிரோடு திரும்பு கிறார்களோ ? அவர்களுக்கே அந்த நிறுவன சி இஒ போஸ்ட் என்பதே அந்த இன்டர்வியூவின் சாராம்சம். அறைக்குள் நுழைந்த சில நிமிடங்களில் எட்டு பேரும் தாங்கள் யார் ? எவர் ..? எனும் சுயத்தை இழந்து ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொள்ளதொடங்குகின்றனர். இறுதியில் வென்றது அஸ்வின் அகஸ்டீன் எனும் ஒருவர் மட்டுமே மற்ற ஏழு பேரையும் , ஆண் பெண் வித்தியாசமின்றி .,போட்டு தாக்கி மட்டையாக்கும் அஸ்வின் அகஸ்டீன் அந்நிறுவன சி இஓ ஆனா ரா? அல்லது ஏழு பேரை கொன்றவிரக்தியில் தானும் தன் கையில் இருக்கும் கத்தியின் வாயிலாக கழுத்தை அறுத்துக் கொண்டு சாய்ந்தாரா …?

சந்தோஷ் பிரதாப் .,அஸ்வின் அகஸ்டின் எனும் நாயகர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஐரா அகர்வால், அன்மோல் சந்து, ஆஞ்சல் சிங் , ஆகிய மூன்று இளம் பெண்கள் முக்கிய பாத்திரத்தில் மனநலம் பாதித்த நாயகரின் தலா ஒரு சுயரூபமாக நடித்திருக்கின்றனர். ஜெயக்குமார் , “ஜீவா” ரவி , ஷ்யாம் கிருஷ்ணன் , ” காதல்” கண்ணன் , ஐரா அகர்வால் , அஜய் , அன் மோல் சந்து, ஆஞ்சல் சிங் , சந்தீப் , சுபாஷ் செல்வம் , ஜெயதேவ் , அருள் , சஹானா …. உள்ளிட்ட அறிமுக , அறிந்த முக நடிகர்களின் நடிப்பும் நான்கு சுவரால் சூழப்பட்ட ஒரே அறைக்குள் என்பதால் சற்று ஓவராகவே சலிப்பு தட்டுகிறது.

பாக்கியராஜின் ஒளிப்பதிவில் காமிரா கோணங்கள் பெரிய ப்ளஸ். சதீஸ் செல்வத்தின் இசையில் பின்னணியில் ஒலிக்கும் இரண்டு பாடல் களும் , பின்னணி இசையும் மிரட்டல் ரசனை. கண்ணன் ரங்கஸ்வாமியின்எழுத்து, இயக்கத்தில “தாயம் ” படத்தை ஒரே ஒரு பாத்திர பெயர் மட்டுமே க்ளைமாக்ஸில் உச்சரிக்கப்படும் புதுமைக்காக ஒரு சிலர் ரசிக்கலாம் .