20வது கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது அறிவிப்பு

கொல்லபுடி ஸ்ரீனிவாச நினைவு அறக்கட்டளை விருது ஆகஸ்ட் 12ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. சென்னை மியூஸிக் அகாடமி அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவில் வெற்றி பெரும் புதுமுக இயக்குனருக்கு ஒன்றரை லட்ச ரூபா பணப் பரிசும், நினைவுப் பரிசும் வழங்கப்படும்.

1992ஆம் ஆண்டு, தனது முதல் படத்தின் படப்பிடிப்பில், விபத்தில் காலமான இளம் இயக்குநர் கொல்லபுடி ஸ்ரீனிவாசின் நினைவாக 1998ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 17ஆம் தேதி விருதுகள் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 12ஆம் தேதி விருதுகள் வழங்கப்படுகின்றன.

கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது, கடந்த 2016 ஆண்டின் சிறந்த புதுமுக இயக்குனராக ‘கோதி பண்ணா சாதாரன மைக்கட்டு’ படத்தின் இயக்குனர் ஹேமந்த் ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவ்வருடம் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை மியூசிக் ஆகாடமியில் நடைபெறவிருக்கும் இந்த விருது விழாவில்இயக்குனர் ஹேமந்த் ராவ் இவ்விருதினை பெறவிருக்கிறார்.

‘கோதி பண்ணா சாதாரன மைக்கட்டு’ – நம் வாழ்க்கையில் சில தருணங்களில் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களை இழக்கிறோம். நட்பு, நம் உறவுகள், நமது நினைவுகள், நமது இயற்கை சுபாவம் ஆகியவற்றும் அதனுள் அடங்கும். “கோதி பண்ணா சாதாரன மைக்கட்டு” படத்தில் நாயகன் தனது தொலைந்து போன அப்பாவை தேடி புறப்படுகிறான். தன் அப்பாவை தேடி செல்கையில் வாழ்க்கையின் இன்பம், அதனுடைய மகிமை, சந்தோஷத்தை பற்றி தெரிந்துக் கொள்கிறான்.

தமிழ், மலையாளம், மனிப்பூரி, அசாமிஸ், கன்னடம் போன்ற மொழிகளில் இருந்து 20 திரைப்படங்களை தேர்வு செய்து “கோதி பண்ணா சாதாரன மைக்கட்டு” படத்திற்கு விருது வழங்கியுள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு, நடிகை பூர்ணிமா பாக்யராஜ், “கவிதாலயா” கிருஷ்ணன் உள்ளிட்ட குழு தேர்வு செய்துள்ளது.

கடந்த 19 வருடங்களில், சுனில் தத், ஜெயா பச்சன், நசுருதீன் ஷா, ம்ரினாள் சென், கோவிந்த் நிஹலானி, மணிரத்னம், சேகர் கபூர், அடூர் கோபாலகிருஷ்ணன், அபர்னா சென், மம்மூட்டி,அக்கினேனி நாகேஸ்வர ராவ், தாசரி நாரயண ராவ், சுப்பிராமி ரெட்டி, ஷபனா ஆஸ்மி, ஷர்மிளா தாகூர், ஆமிர் கான், ஷோபனா, கவுதம் கோஸ், அனில் கபூர், வித்யா பாலன், மதுர் பண்டார்கர்,விஷால் பரத்வாஜ், சத்ருகன் சின்ஹா, லக்‌ஷ்மி, பாலு மகேந்திரா, ரிஷி கபூர், சிரஞ்சீவி, ஜெயசுதா, கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இந்த விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இந்த விருது, கடின உழைப்புக்கு நடுவில் தங்கள் சிந்தனைகளை திரையில் கொண்டு வரும் அறிமுக இயக்குநர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கிறது.

தங்களது மகனின் கனவு நனவாவதை, முதலில் போராட்டமாகவும், பின்பு வெற்றியாகவும் அனுபவிக்கின்றனர் அந்த குடும்பத்தினர். இந்த விருதின் மூலம், அறிமுக இயக்குநருக்கு தேசிய அளவு பாராட்டு கிடைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது கடின உழைப்புக்கு அங்கீகாரமும், தொடர்ந்து இமாலய வெற்றிகள் பெற ஊக்கமும் கிடைக்க உறுதி செய்கிறது.

மேலும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை பொழுதுபோக்கானதாகவும், அதேசமயம் பயனுள்ளதாகவும் மாற்ற, சிறப்பு கலை நிகழ்ச்சிகளோடு, சிறந்த திரை ஆளுமை ஒருவரின் உரையும் இருக்கும். திரைப்படம் எடுப்பதில் தாங்கள் பெற்ற அனுபவத்தை வளரும் இயக்குநர்களோடு பகிர்ந்து கொள்ள இது சரியான தளமாக இருக்கும்.

இதற்கு முன், நசீருதின் ஷா, சுனில் தத், கவுதம் கோஸ், ஜாவேத் அக்தர், ம்ரிணாள் சென், ஷ்யாம் பெனகல், அமோல் பரேகர், கவுதம் கோஸ், கிரிஷ் கசரவல்லி, கிரிஷ் கர்னாட், ரிஷிகபூர் உள்ளிட்டோர் கடந்த காலத்தில் அத்தகைய உரைகளை வழங்கியுள்ளனார். எதிர்கால சந்ததிகள் பயன்பெற இந்த உரைகள் புத்தகமாக தொகுக்கப்படும்.

கொல்லபுடி ஸ்ரீனிவாச நினைவு அறக்கட்டளை விருது.
ஜிவி ராம கிருஷ்ணா, ஜிவி சுப்பா ராவ்