மாறுவோம் மாற்றுவோம் – நடிகர் ஆரி

வங்கிக் குளறுபடிகளினால் பாதிக்கப்படும் சாமன்ய மக்களுக்கு தீர்வாக அஞ்சலகங்களில் 50 ரூபாய் கையிருப்பில் அனைத்து வகை பயன்பா டுகளும் கொண்ட கணக்கை துவக்கும் மாற்று வழியை மக்களிடத்தில் பரப்புவதில் ஒரு தமிழனாய் இந்த விழிப்புணர்வு  புரட்சியை மாணவச் சகோதர சகோதரிகளுடன் இணைந்து ஆரம்பித்ததில் நான் பெருமை கொள்கிறேன். இந்தச் செய்தியை விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவோம். நாம் மாறினால்   மாற்றங்கள்  உருவாகும்
மக்களிடமும் மாற்றத்தை உருவாக்குவோம். தமிழனாய் நான்  உருவாக்கிய இந்த மாற்றம்  இந்தியா முழுவதும் உருவாக வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.
இதற்கு ஒத்துழைப்பு தந்த மாணவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும், அனைத்து தொலைக்காட்சிளுக்கும், இணையதள நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
Previous articleஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஒன் ஹார்ட்” திரைப்படம்
Next articleMoviebuff First Clap – Top-5