தமிழ் தெலுங்கு ஹிந்தி என முன்று மொழிகளில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கும் மாம்

198

தமிழ் தெலுங்கு ஹிந்தி என முன்று மொழிகளில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கும் மாம் (அம்மா)

ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்கிறார்

பல படங்களில் தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் வசீகரித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பல நடிகர் நடிகைகளின் கனவாக திகழும் ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறுது காலம் ஒய்வு கொடுத்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘புலி’ படங்களின் மூலமாக தனது நடிப்புக் கலையை தொடர்ந்த ஸ்ரீதேவி, தற்போது “மாம்” (அம்மா) எனும் படத்தில் முன்னனி கதாபத்திரத்தில் நடிக்கின்றார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க அறிமுக இயக்குனர் ரவி உதயவார் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியுடன், அக்ஷய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் போஸ்டரை நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி இணையதளத்தில் வெளியிட்டனர்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள “மாம்” (அம்மா) திரைப்படம் வரும் ஜூலை மாதம் 14ம் தேதி Zee ஸ்டுடியோஸ் உலகமெங்கும் இப்படத்தை வெளியிடுகின்றது.

Previous article“Maragadha Naanayam Audio Launch is very special to me” says Sivakarthikeyan
Next article“Working with a trained a dog is totally different from working with a Fish” – Sibiraj