இரு பெரும் பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பாளர் V.ஹித்தேஷ் ஜபக்

203

நான் அவன் இல்லை, அஞ்சாதே, மீகாமன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை அளித்த தயாாிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக்கிற்க்காக V.ஹித்தேஷ் ஜபக் இரு மிகப்பிரம்மாண்டான படங்களை தயாரித்து வருகிறார்.

முதல் படமாக நடிகை நயன்தாரா நடிப்பில் தாஸ் ராமசாமி இயக்கத்தில் “டோரா” எனும் த்ரில்லர் படம் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் “டோரா” வரும் மார்ச் 31ம் தேதி வெளியாகிறது

இரண்டாவது படமாக தொடர் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடிக்கும் “டிக் டிக் டிக்” படத்தை நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் வெற்றி படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார்

விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் இந்திய படமாக உருவாகும் இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் ,வின்செண்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மிருதன் வெற்றி படத்திற்கு ஜெயம் ரவி – சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடதக்கது. தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் “டிக் டிக் டிக்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Previous articleDirector SASI talks about VIZHITHIRU
Next articleJulieum 4 Perum Movie Official Trailer